Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏழு சக்கரங்களில் சுவாச நடப்பு
முதல் பக்கம் » பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு
பொருள் அகராதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2015
06:12

(அருஞ்சொற்கள் தத்துவபதங்கள் தொகை முதலானவற்றின் பொருள் விளக்கங்கள் அகர வரிசையில் தரப்பட்டுள்ளன. இவை தவிர இப்புத்தகத்திலுள்ள ஞானசர நூல் குருஞானசம்பந்த சுவாமிகளின் சிவபோக சாரம் அருணாசல குருவின் நிஜானந்த போதம் முதலியனவற்றிலும் தத்துவ விளக்கங்களைப் படித்துணரலாம்.)

அகக்கரணம் மனம் (காண்க: அந்தக் கரணங்கள்)

அகக் கூத்து (2) - சாந்திக்  கூத்து, வினோதக் கூத்து.

அகச்சமயம் - உட்சமயம்;

சைவத்தின் உட்பிரிவுகள் ஆறு; அவை பாக்ஷாண வாதம், பேதவாதம் சிவசமய வாதம். சிவசத்துவிதம் எனவும், வேறு சிலர் அவை சைவம் பாசுபதம் மாவிரதம் களாமுகம்; வாமம் வைரம், எனவும் கூறுவர்.

அகப்பகை 6- காமம், குரோதம் உலோபம் மோகம்:

மதம்: மாற்சரியம்.

அகப்புறச்சமயம்  6 ஐக்கியவாத சைவம், பாசுபதம், மாவிரதம், காபாலம் வாமம், வைரவம்.

அகப்பேய் - மனம் எனும் பேய்.

அகம் பிரமன் - நானே பிரமம்.

அகிதம் - நன்னமயில்லாமை தீமை

அகிர்த்தியம் - தகாத செய்கை.

அக்கமணி - அக்கமாலை - உருத்திராட்ச மாலை.

அக்கினி 3 ஆகவனீயம்; காருத பத்தியம்; தாட்சனாக்கினி.

அக்கு  - எலும்பு கண்

அங்கி - அக்கினி சட்டை

அங்கிசம் - அமிசம்

அங்குளத்து - தோன்றி

அங்கை - அழகிய கை உள்ளங்கை

அகம்பு - அசைவு கசிவு

அசரம் - அசைவில்லாதது தாவரம்

அசவை - அசுபா மந்திரம்

அஷ்டகஜங்கள் - ஐராவதம் புண்டரீகம் வாமனம் குமு தம் அஞ்சனம் புஷ்ப காந்தம், சாரு, வபூமம் சுப்ரதீபம் எனும் எட்டு ஆண் யானைகள் அப்பிரமை, கபிலை, பிங்கலை அனுபமை தாமிர பருணி சுதந்தி அஞ்சனை அஞ்சானாவதி என்னும் எட்டு பெண் யானைகள் இவை அஷ்டதிக்கு யானைகள் எனக் கூறுவர்.

அஷ்ட சித்திகள்- பெற்ற பதினெண் சித்தர்கள். 1. அகத்தியர் 2. போகர்; 3. கைலாய நாதர்; 4. கோரக்கர்; 5. திருமூலர் 6. சட்டை முனி; 7. கொங்கணர்; 8. கூன் கண்ணர்; 9. இடைக்காடர்; 10. நந்தீஸ்வரர் 11. புண்ணாக்கீசர் 12 உரோமரிஷி 13. மச்சமுனி 14. கூர்மமுனி; 15. சமலமுனி; 16. வாசமுனி 17. பிரமமுனி; 18 சுந்தரானந்தரர் இவர்களைத் தவிர கருவூரார் புலஸ்தியர் புசுண்டர்; இராமதேவர் தன் வந்திரி கபிலர் முதலானோரையும் அட்ட சித்திகள் பெற்றதாகக் கூறுவார்கள்.

அஷ்டதிக்குப்பாலகர்-
இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு; குபேரன்; ஈசானன்

அஷ்டமா நாகங்கள்: காண்க: எட்டு நாகம்

அஷ்டாங்க யோகம் -  இயமம்; நியமம் ஆதனம் தாரணம் பிராணாயாமம் பிரத்தியாகாரம் தியானம் சமாதி.

அஞ்சக்கரம் - பஞ்சாக்ஷரம் (விளக்கம் பஞ்சாக்ஷரம் என்னும் தலைப்பின் கீழ் காண்க:)

அஞ்செழுத்து - சிவாய நம

அடலை- சாம்பல், நீறு, துன்பம்;

அட்டகசங்கள் - திக்கு யானைகள் (காண்க: அஷ்டகஜங்கள்)

அட்ட சித்தி - (அஷ்டமா சித்திகள்) எட்டு வகைப் பெரும் பேறுகள் 1 அணிமா; 2 மகிமா; 3. இலகுமா; 4. கரிமா; 5. பிராப்தி; 6. வசித்துவம்; 7. பிராகாமியம்; 8. ஈசத்துவம் (இவற்றின் விளக்கங்களை அவ்வவற்றின் தலைப்பின் கீழ் காண்க.)

அட்டமூர்த்தம் -பூமி; நீர், தேயு வாயு, ஆகாயம், சூரியன் சந்திரன், ஆன்மா.

அட்டாங்கயோகம் - (காண்க அஷ்டாங்க (யோகம்)

அணிமா அணுவைப் போலச் சிறிதாதல் (நுண்மை)

அண்டர்கோன் - இறைவன்

அதர் - தலைப்பொடுகு, சக்கை.

அதள்-தோல்: மரப்பட்டை

அதிட்டானம் - நிலைக்களம்

அத்தம் -பொருள்

அத்தன்-பிதா, கடவுள், உயர்ந்தோன்.

அத்துவிதம் இரண்டறக் கலந்தது. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றெனல்.

அந்தக்கரணம் மனம் புத்தி அகங்காரம், (இம்மூன்றோடு சித்தம் என்பதனையும் கூட்டி நான்கு எனக் கொள்வதும் உண்டு.)

அப்பிட்ட வேணியன் - கங்கை தங்கிய சடையுடைய பெருமானான சிவன்.

அப்பு - நீர்

அப்புப்பிறை - மணி பூரகம்

அமரி - சிறுநீர்

அமுரி -- சிறுநீர் உப்பு

அமலன் - கடவுள் குற்றமற்றவன்

அம்பு-நீர், பாணம்: மேகம்

அம்புயன்-பிரமன்

அம்போருகம் - தாமரை மலர்

அயன் - பிரமன், சிவன்

அரணம் - அரண், கோட்டை

அரன் - சிவன்

அருக்கன், சூரியன்

அருந்தாமுலை உண்ணாமுலை

அருவ வடிவம் நான்கு - சிவம் சத்தி, விந்து, நாதம்.

அலகிடுதல் - பெருக்குதல் கணித்தல் - சீர்பிரித்தல்.

அலகு - அளவு. கொதுகு

அலகை -பேய், கற்றாழை

அலகைத் தேர் - பேய்த்தேர், கானல் நீர்

அல்-இருள், மயக்கம்.

அல்குல் - பெண்குறி

அல்குற்பை - கருப்பை

அவத்தை இரண்டு. கேவலா வத்தை; சகளாவத்தை

அவத்தைகள் ஐந்து - சாக்கிரம் சொப்பனம் ; சுழுத்தி, துரியம்; துரியாதீதம்

அவஸ்தை ஏழு - கர்ப்பாவஸ்தை; ஜன்மாவஸ்தை, பாலியா வஸ்தை; யௌவனா வஸ்தை. ஜராவஸ்தை; மரணாவஸ்தை, நரகாவஸ்தை;

அவம் - வீண், தீமை

அவ்வெழுத்து- ஆன்ம எழுத்து

அழற்சி - எரிச்சல்

அழுங்கினை - அலைந்தாய் துன்புற்றாய்;

அழுந்தினை - ஆழ்ந்தாய்

அளைதல் - கலத்தல் அனுபவித்தல், குழைதல்.

அறுகு - புல்

அறுபது பேர் - அறுபது தத்துவங்கள்

அனன்னியம் வேறு அல்லாத் தன்மை

அனாகதம் (இருதயம்) மணி பூரகத்துக்கு மேல் இருதய வெளியில் 12 இதழ் தாமரை போல இருக்கும் சக்கரம்

அனாதி கேவலம் - படைப்பு முன்தனி நிலை.

அணு மூன்று அணு , பரமாணு இலேசம்.

அனுராக மயக்கம் - காம மயக்கம் அனுபூதி மெய்யறிவு

ஆகம் - உடம்பு, மனம், மார்பு

ஆகாமியம் - வரும் கருமம்; இந்தப் பிறவியில் செய்யும் புண்ணிய பாவங்கள்

ஆக்கை - உடம்பு கழிகளைக் கட்டும் கயிறு.

ஆஞ்ஞை - ஆக்கினை (நெற்றி) இரண்டு புருவங்களின் மத்தியில் இருக்கும் இரண்டு இதழ் தாமரை போன்ற சக்கரம்.

ஆசம் - சிரிப்பு இருக்கை.

ஆசயம்- உடலின் உட்பை, உறைவிடம்

ஆசூசம் - அழுக்காறு, தீட்டு

ஆசைகள் மூன்று: 1. மண்ணாசை; 2. பெண்ணாசை; 3. பொன்னாசை;

ஆதாரங்கள் ஆறு 1 மூலாதாரம் (குதம்) 2. சுவாதிட்டானம் (குய்யம்) 3. அநாகதம் (இதயம்) 4. மணிபூரகம் (நாபி) 5. விசுத்தி (அடிநா) 6 ஆக்கினை (நெற்றி) (இவற்றன் விளக்கங்களை அவ்வவ் தலைப்பின் கீழ் காண்க.)

ஆதாரஸ்தலம் - ஆறு 1. மூலாதாரம்- திருவாரூர்; 2. சுவாதிட்டானம்- திருவினைக்கா 3. மணிபூரகம்-திருவண்ணாமலை, 4. அநாகதம் - சிதம்பரம். 5. விசுத்தி, திருக்காளத்தி 6. ஆக்கிணை, காசி.

ஆதார தேவதைகள் -ஆறு

1. மூலாதாரம்- விநாயகர்
2. சுவாதிட்டானம் - பிரமன்
3. மணிபூரகம் - விஷ்ணு
4. அநாகதம் - ருத்திரன்
5. விசுத்தி - மகேசுவரன்
6. ஆக்கிணை- சதாசிவன்

ஆதார மூலம் - மூலாதாரம் (அத்தலைப்பின் கீழ் காண்க.)

ஆத்தும தத்துவங்கள் ஞானேந்திரியம் கன்மேந்திரியம்; அந்தக்கரணம், தன் மாத்திரை, பூதம் (காண்க: ஆன்ம தத்துவங்கள்.)

ஆரியன் - ஆசிரியன், குரு பூசிக்கத்தக்கவன்.

ஆலவாய் - தென்மதுரை

ஆலன் - ஆலவன், விஷ்ணு

ஆறு ஆதாரங்கள் - (காண்க; ஆதாரங்கள் ஆறு)

ஆனனம் -முகம், தேவதாரு.

ஆன்ம தத்துவம் 24- பிருதிவி அப்பு; தேயு: வாயு: ஆகாயம்; மெய்; வாய்; கண்; மூக்கு; செவி; சத்தம்; பரிசம்; உருவம்; ரசம்; கந்தம்; மனம் புத்தி; சித்தம்; அகங்காரம்; வாக்கு; பாதம், பாணி, பாயு, உபத்தம்.

ஆன்மா வகை மூன்று -விஞ்ஞானகலர்; பிரளயாகலர்; சகலர்.

இகல் -பகை, வலி, மாறுபாடு

இச்சா ஞானக்கிரியை - விழைவு அறிவு செயல்.

இடும்பை - தீமை; துன்பம் அச்சம்

இடைகலை - சந்திரகலை; இட மூக்கு மூச்சு

இடைகலை பிங்கலை - சந்திரை கலை சூரியகலை (இடமூக்கு மூச்சு, வலமூக்கு, மூச்சு)

இந்தனம் - விறகு: வாசனைப் புகை.

இந்தியம் - இந்திரியம்

இந்திரசாபம் - வானவில்

இந்திரிய கோசரம் - புலனுக்கு எட்டியது.

இந்திரியம் - சுக்கிலம்; பொறி

இந்திரிய வகை இரண்டு, ஞானேந்திரியம், கன்மேந்திரியம்

இந்து -சந்திரன், எட்டி

இமிர்தல் -ஒலித்தல், ஊதுதல்

இரசோகுண விருத்தி எட்டு - யான் எனதென்னும் செருக்கு, வீரம், பெருமுயற்சி, கொடுமை, வஞ்சனை திடமுடைமை. இரக்கமின்மை, போகம், இடம்பகம்.

இராசதகுணம் - மனவூக்கம், வீரம் ஞானம், தவம், தருமம், தானம், கல்வி, கேள்வி,

இருமை-இம்மை: மறுமை

இருவினை - நல்வினை தீவினைகள் (புண்ணியம், பாவம்)

இருவினைக்கூடு-இருவினைக்கு உறையுள்ளாக இருக்கும் உடம்பு.

இரேசகம் - உள்ளிழுத்த காற்றை (வாயுவை) வெளிவிடுதல்.

இலகிமா - காற்றைப்போல் இலோசதல் (மென்மை)

இலிங்கம் ஐந்து - பிருதிவி லிங்கம் காஞ்சியில், அப்பு லிங்கம் திருவானைக் காவில், தேயு லிங்கம் திருவண்ணாமலையில், வாயுலிங்கம் காளத்தியில்; ஆகாய லிங்கம், சிதம்பரத்தில் இவையே பஞ்ச பூத வடிவங்களான பஞ்சவி லிங்கம்.

இவறுதல் - ஆசையுறுதல் உலோபம் கொள்ளுதல்.

இறைவனின் ஐந்தொழில்கள் - சிருஷ்டி, ஸ்திதி, சங்காரம், திரோபவம், அனுக்கிரகம் இவை தமிழில் முறையே படைத்தல்; காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனப்படும்.

இனக் கரணம் - அகக் கரணங்களுக்கு இனமான கை கால் போன்ற உறுப்புகள்.

இன்பு - இன்பம்; விருப்பம்

ஈசத்துவம் விரும்பியதையெல்லாம் செய்து முடித்து அனுபவித்தல் (ஆட்சியனாதல்)

ஈசானன் - இயக்கம்

ஈசுரன் முகம் ஐந்து --ஈசானம் தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம்

உகிர்-நகம்

உச்சிவெளி -சிதாகாசம்

உஞற்றுதல்-செய்தல், முயலுதல், தூண்டுதல்

உடக்கு -தத்துவம்

உடுபதி - சந்திரன்

உட்பகை ஆறு - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் இவை தமிழில் முறையே அவா. வெகுளி, இவறல், மயக்கம் செருக்கு பொறாமை எனப்படும்.

உதகம்- நீர் , பூமி

உதரம் -வயிறு, கருப்பம்

உத்தியம் -யாக வகை

உப்பிட்ட பாண்டம் - உடம்பு

உரகம் -நாகம்

உருவுடம்பு - தூலசரீரம்

உழுவை -புலி  மீன் வகை

உறக்கு - உறக்கம்

உன்மாதம் - மயக்கம்

ஊழ்வகை மூன்று-பிராரப்தம் ஸஞ்சிதம் ஆகாமியம் (காண்க கன்மங்கள்)

ஊன் -உடல் மாமிசம் கொழுப்பு

எட்டாப் பழம்பதி - சிவபதம்

எட்டு நாகம் - வாசுகி, தக்கன் அனந்தன், சங்கபாலன்

குளிகன், பதுமன் மகாபதுமன், கார்க் கோடகன் என்னும் அஷ்டமாநாகங்கள்

எருவாய் - மலத்துவாரம்.

எழுவகைத் தோற்றம் - தேவர் மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன தாவரம், ஆகிய ஏழுவகை பிறவிகள்.

ஏகாந்தம் - தனிமை, தனியிடம்

ஏஷணை மூன்று - அர்த்த ஏஷணை, புத்திர ஏஷணை, லோக ஏஷணை

ஏடணை - ஆசை, விருப்பம்

ஏடு-பூ இதழ், பனையோலை உடல்

ஐ - ஐயம், கோழை

ஐங்கரன் - கணபதி.

ஐம்புலன் - சுவை, ஒளி; ஊறு; கன்று; ஓசை; நாற்றம் (சுவைத்தல், பார்த்தல், ஸ்பரிசித்தல், கேட்டல் முகர்தல்) ஐம்பூத காரியம் 25 (பிருதிவியினால் தோல், எலும்பு, நரம்பு, தசை, மயிர் அப்புவினால் நீர், உதிரம் மச்சை, மூளை, சுக்கிலம் தேயுவினால் ஆகாரம் நித்திரை; பயம்; மைதுனம் சோம்பல் வாயுவினால் ஓடல்; நடத்தல்; நிற்றல், இருத்தல், கிடத்தல் ஆகாயத்தினால் குரோதம் கோபம், மோகம், மதம் மாற்சரியம்.)

ஐம்பூதம் - ஐம்பெரும் பூதம் நிலம், நீர், தீ, காற்று, விசும்பு ( பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம்)

ஐம்பொறிகள் - (பஞ்சேந்திரியங்கள் எனும் தலைப்பின் கீழ் காண்க.)

ஐம்மலம் (காண்க; மலம்)

ஐவர் - ஐம்பொறிகள்.

ஒருப்பாடு - ஒன்றி நிற்றல்

ஒக்கம் - உயர்ச்சி,  பெருக்கம்,

ஓகை- மகிழ்தல்

ஓங்காரம் -  பிரணவநாதம், ஓம்

ஓம்பினை - பாதுகாத்தாய்; வளர்த்தாய்

கடிதடம் - பெண் குறி.

கடும்புகூ- சுற்றம்; சும்மாடு

கடுவெளி - பிரமம்

கண்ணுதலோன் - நெற்றிக் கண் உள்ளே சிவன்

கண்ணேறு - திருஷ்டி; தோஷம்

கமடம் - ஆமை

கமலை - திருவாரூர், இலக்குமி,

கரணம் நான்கு - மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.

கரிமா - பொன் போலக்கன மாதல் (விண்டன்மை)

கல்லாவின் பால் - ஆத்மா எனும் பசுவின் ஞானம் எனும் பால்.

கழு - கழுகு, கழுமரம்.

கற்பம் - ஊழிக்காலம் , மூப்பு நீக்கி ஆயுளை நீடிக்கச் செய்யும் மருந்து.

கன்மங்கள் - ஆன்மாக்கள் மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றினாலே செய்த புண்ணிய பாவங்கள் இவை எடுத்த பிறப்பிலே செய்யப்பட்ட போது ஆகாமியம் (நிகழ்வினை) எனப் பெயர் பெறும் பிறவி தோறும் இவ்வாறு ஈட்டப் பட்டுப் பக்குவமடையும் வரையில் புத்தி தத்துவம் பற்றுக் கோடாக மாயையிலே கிடக்கும் போது சஞ்சிதம் (தொகைவினை அல்லது இருப்பு வினை) எனப் பெயர் பெறும். இவ்வாறு சஞ்சித கன்மங்களுக்குள்ளே பக்குவபட்டவை மேல் எடுக்கும் உடலøயும் அதன் மூலம் அனுபவிக்கப் படும் இன்ப துன்பங்களையும் தந்து பலன் விளைவிக்கிறபோது பிரார்த்தம் (துவக்க வினை அல்லது நுகர்வினை) எனப் பெயர் பெறும்.

கன்னி வனம்- மதுரை மாநகரம்

காசை - நாணல் காயாமரம்.

காஞ்சிரங்காய் - எட்டிக்காய்.

காட்டம் - விறகு, வெண்கலம்

காண்டம் - உப்பு, நீர் - கோல்.

காமியம் - ஆசை ஒன்றை வேண்டிக் செய்யும் பூசை

கன்ம மலம் காயம் - உடம்பு ஆகாயம் காரண தன் மாத்திரைகள் ஐந்து சத்தம். ஸ்பரிசம், ரூபம், ரசம் கந்தம்.

கால காலன் - சிவபெருமான்.

காலி -பசு பசுக் கூட்டம்.

கிரியை - கடவுளை ஆகம விதிப் படி வழிப்படல் (சிவலிங்கப் பெருமானை- அகத்தும் புறத்தும் பூஜித்தல்)

குக்குடம் - கோழி

குடிலை - சுத்த மாயை பிரணவ குடிசை

குடோரி வெங்காரம் வெள்ளை பாஷாணம்

குணக்கெடுத்தல் - கோணலை நிமிர்த்தல்.

குண்டலி - மூலாதாரம், நாபி ஸ்தானம் ஒரு நாடி

குதம் - நீர்கழிவாயில்

குத்திரம் - வஞ்சகம் இழிவு.

கும்பகம் - வாயுவை உள்ளே அடக்குதல்

குயம் - முலை, இளமைதர்ப்பை

குய்யம் - மலங்கழி வாயில்.

குரம்பை - உடல் குடில் கூடு முட்டை

குருப்புனல் - ஆசிரிய அபிஷேகம்.

குருமூர்த்தம் - தெய்வம் குருவாக வருவது

குருளை - குட்டி

குலாம் - உலோபிகள், கீழோர் அடிமைகள்.

குறங்கு - தொடை

குறடா - சவுக்கு

கூதரை - முறைமையில்லாதவன் இழிவானது.

கூத்தன் -உயிர் சிவன்

கோசம் ஐந்து - அன்ன மயம், பிராணமயம், மனோமயம், விக்கியான்மயம், ஆனந்த மயம். இவை தமிழில் முறையே உணவுடம்பு, காற்றுடம்பு,  மனவுடம்பு, அறிவுடம்பு, இன்பவுடம்பு, என ஐந்து உடம்புகள் எனப்படும்.

கொப்பம் - யானையைப் பிடிக்க வெட்டப்படும் பெருகுழி.

கோரணி கோளாறு ஹாஸ்யம்

சகத்திரம்  - ஆயிரம்

சகளர் - ஆணவம், கன்மம் மாயை ஆகிய மும்மல முடைய ஆன்மாக்கள்.

சகளம் - உருவம்

சக்திகள் - இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானா சக்தி, பரிக்கிரக சக்தி, திரோதான சக்தி, சிற்சக்தி, இவை தமிழில் முறையே விழைவாற்றல் செயலாற்றல், அறிவாற்றல் வைப்பாற்றல், மறைப்பாற்றல், அறிவாற்றல் எனப்படும்.

சடக்கு - உடல், வேகம், சட்டை செருக்கு.

சட்சமய பேதங்கள் - ஆறு மத பேதங்கள்.

சட்சமயம் - ஆறுவகைச் சமயங்கள் (காண்க; அகச்சமயங்கள்)

சட்டகம்- உடம்பு , வடிவு, பிணம்.

சண்முகி முத்திரை - ஸ்நானம் செய்யும் முறைப்படி ஆசமனம் பண்ணிச் சகளீகரணம் செய்து கொப்பூழளவு ஜலத்தில் இறங்கி இரண்டு காதுகளையும் இரண்டு பெரு விரல்களினாலும் இரண்டு கண்களையும் இரண்டு சுட்டு விரல்களினாலும் இரண்டு நாசிகளையும்  இரண்டு நடு விரல்களினாலும் மூடிக் கொண்டு இறைவனைக் சிந்தித்து ஸ்நானம் செய்யும் போது அவ்வாறு கைவிரல்களினால் மூடுவது சண்முகி முத்திரை எனப் பெயர் பெறும்.

சத்தாது - இரசம், உதிரம் எலும்பு, தோல், இறைச்சி மூளை, சுக்கிலம், என்னும் ஏழுவகைப் பொருட்கள்.

சக்தி மூன்று - இச்சா சக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி.

சத்துவகுணம் - ஞானம், அருள் தவம், மேன்மை, பொறுமை, வாய்மை, மோனம், ஐம்பொறி அடக்கல்,

சரியை - கடவுளைக் கோவிலில் வைத்து வழிபடுதல் (சிவன்கோயிலுக்கும், சிவனடியார்களுக்கும் தொண்டு புரிதல்)

சர்ப்பனை - வஞ்சகம்

சழக்கு - குற்றம்

சாகை - கிளை, பிரிவு, தங்குமிடம், சாதல்.

சாதம் - உண்மை இன்மை, பிறப்பு, சுகம்.

சாத்திரம் ஆறு - வேதாந்தம், வைசேடிகம், பாட்டம், பிரபாகரம், பூர்வ பீமாஞ்சை உத்தர மீமாஞ்சை.

சாமீபம்- இறைவனை நெருங்கியிருக்கும் நிலை.

சாயுச்சியம் - இறைவனோடு இரண்டறக் கலத்தல் ஜீவாத்மா பரமாத் மாவோடு ஐக்கியமாகும் நிலை மோட்சம்.

சாரூபம் - இறைவன் உருப்பெற்று விளங்கும் பேறு,

சாலோகம் - இறைவன் உலகத்தில் இருக்கும் பேறு (இறைவனோடு ஒரே இடத்தில் இருக்கும் நிலை)

சாளிகை - பணப்பை

சிங்கி - குறத்தி.

சிங்கு - கழியும்.

சிக்ஷை - வேதங்களை உதாந்தம் அநுதாத்தம் முதலான சுர வேறுபாடுகளினால் உச்சரிக்கும் முறைமையை அறிவிப்பது.

சிதாகாசம் - ஞானாகாசம்.

சிந்தூரம் - நீறு, சிவப்பு, செஞ்சுண்ணம்.

சிம்புள் - சரவம் என்னும் பறவை.

சிவசக்தி - அக்கினியோடு உஷ்ணம் போல் சிவத்தோடு பிரிவின்றி இருக்கும் வல்லமை.

சிவ சின்னம் இரண்டு- உருத்தி ராக்கம் விபூதி

சிவதத்துவம் ஐந்து - சுத்தவித்தை; ஈச்சுவரம், சாதாக்கியம்: சக்தி, சிவம்.

சிவ தீக்ஷை-சிவ பெருமானை சிவாகம விதிப்படி வழி படுவதற்கு யோக்கியதையை பிறப்பிப்பது.

சிவபெருமான் தொழில்கள் ஐந்து - படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்.

சிவன் உருவங்கள் மூன்று -அருவம், அருவுருவம், உருவம்.

சிவன் தன்மைகள் - நித்தியர் (என்றும் உள்ளவர்) சருவ வியாபகர் (எங்கும் நிறைந்தவர்) அநாதிமல முத்தர் (இயல்பாகவே பாசங்களின் நீங்கினவர்) சருவஞ்ஞர் (எல்லாம் அறிபவர்) சருவ கர்த்தா (எல்லாம் செய்பவர்) நித்தியானந்தர் (என்றும் ஆனந்தமயமானவர்) சுவதந்திரர் (தன்வயமுள்ளவர்)

சிவன்வகை மூன்று - அதிகார சிவன், போக சிவன்; இலய சிவன்.

சிவாகமபாதம் நான்கு - 1 சரியா பாதம் (சமயாசாரம் ) சமய விசேட நிருவாண ஆசாரியா பீடேக விதிகள்  2 கிரியா பாதம் (மந்திரங்களின் உத்தாரம் சந்தியாவந்தனம் பூஜை ஜபம், ஹோமம் முதலியன) 3 யோகபாதம் ( பிராணாயாமம் முதலான யோக முறைகள் ) 4 ஞான பாதம் (பதி பசு பாசம் இலக்கணம் பேசப்படும்)

சிவாயம் - நமசிவாயம்

சிவ்வெழுத்து - சிவவெழுத்து

சின்மய நோக்கு- ஞான நோக்கு

சின்மயம் - ஞான மயம்: அறிவு வடிவமான கடவுள் நிலை.

சீவதேகம்  மூன்று - தூலம்; சூக்குமம், காரணம்.

சீவன் முக்தி உயிரோடு வாழும் போதே உலகப் பற்றைக் கடந்து மோட்சமடைதல்.

சுகாதீதம் - இன்ப மயம்.

சுடர் மூன்று - சூரியன்; சந்திரன், அக்கினி

சுத்த வித்தை ஐந்து - வித்தை சிவம், சத்தி, சக்கரம்,கிரியை.

சுவாதிட்டானம் - (குய்யம்) மூலாதாரத்திற்கும் நாபிக்கும் (கொப்பூழிற்கும் ) நடுவே ஆறு இதழ் தாமரை போல இருக்கும் தானம்.

சுழி முனை - நடுநாடி.

சூதானம் - எச்சரிப்பு, சேமம்.

செழுந்து - செழிப்பு

செறந்தான் - செறிந்தவன்

சொடக்கு -கை நொடிப்பொழுது சோம்பேறித்தனம்.

சோடகம் -பதினாறு

சோத்திரம் - செவி

சோமன் - சந்திரன், சிவன்

ஞாளி - நாய்,கள்

ஞானம் - பதி, பசு பாசம் என்னும் முப்பொருள்களின் இலக்கணங்களை அறிவிக்கும் ஞான நூல்களைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடல்.

ஞான வகை நான்கு -கேட்டல்; சிந்தித்தல்; தெளிதல்; நிட்டை கூடல்.

ஞெப்தி - நினைவு

ஞேமம் - அறியப்படும் பொருள் கடவுள்.

தசநாடி - இடைகலை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி அத்தி சிங்குவை; சங்கினி பூடாகுரு, கன்னி, அலம், புடை, என்னும் பிராண வாயு இயங்கும் பத்து நாடிகள்.

தசவாயு - பிராணன்; அபானனன் உதானன் வியானன் சமானன். நாகன் கூர்மன், கிருகரன்; தேவதத்தன், தனஞ்செயன் என்னும் பத்து வாயுக்கள். இதை தமிழில் முறையே உயிர்க் காற்று மலக்காற்று, ஒலிக்காற்று, தொழிற்காற்று, நிரவுக்காற்று, தும்பற்காற்று , விழிக்காற்று, கொட்டாவிக் காற்று, இமைக்காற்று, வீங்கற்காற்று என்பர்.....

தத்துவங்கள் 96- ஆன்மதத்துவம் 24, நாடி 10, அவத்தை 5, மலம் 3, குணம் 3, மண்டலம் 3, பிணி 3, விகாரம் 8, ஆதாரம் 6, தாது 7, வாயு 10, கோசம் 5, வாயில் 9.

தண்டிகை - பல்லக்கு

தவிசு - ஆசனம் - இருக்கை பீடம்.

தற்பரம் -  சுழிமுனை ஸ்தானம்

தன்மாத்திரைகள் - ரசம், ரூபம், பரிசம் சத்தம், கந்தம் இவை தமிழில் முறையே சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என ஐந்து நுண்ணிய பொருட்கள் எனப்படும்.

தனுகரண புவன போகம் - தனு என்பது உடம்பு கரணம் என்பது மனம் முதலான கருவி புவனம் என்பது
உடம்புக்கு ஆதாரமாகிய உலகம் போகம் என்பது அனுபவிக்கப்படும் பொருள்.

தாமச குணம் - பேருண்டி பெரும் உறக்கம், சோம்பல், நீதி பிறழ்தல், ஒழுக்கத்தவறு வஞ்சகம், மறதி; கோபம் பொய்மை, காமம், கொலை.

தாரகம் - ஆதாரம், பிரணவம்

தாரணை - நினைவொருமை

தாரை - வழி, நீர் ஒழுக்கு

தாலம் - பூமி

தானவர் - அசுரர், வித்தியாசர்.

திரமா - என்றுமிருப்போனே

திரயம் - மூன்று

திரிகரணம் -மனம், வாக்கு காயம்.

திரிதோஷம் - வாதம்; பித்தம், சிலேஷ்மம் (கபம் )

திரிமலம் - காண்க; மலம்

திருக்கம் - வளைவு; வஞ்சகம்;

திருக்கு - மயக்கம்

திரோதாயி - ஆணவம், கன்மம், மாயை என்னும் மும் மலங்களையும் தொழில் படுத்திப் பாகம் வருவிக்கும் சிவசக்தி.

திவகாரம் - ஒளி.

தீவகம் - மானைக் காட்டி மற்றொரு மானைப் பிடிப்பது போல் ஒரு பொருளை அதன் இனமான பொருளைக் கொண்டே பிடிக்கும் முறை. துங்கம் பெருமை அகலம் வெற்றி.

துரிசு - குற்றம், துன்பம்.

தெக்குதல் - கொள்ளுதல்

தேயு - தீ மயக்கம்

தொடக்கு - தீட்டு, கட்டுபற்று

தொண்ணூற்றறுவர் தொண்ணூற்றாறு தத்துவங்கள். (காண்க; தத்துவங்கள் 96)

தொழில் ஐந்து- தேவ தானம், விசர்க்கம் ஆனந்தம் பயம்

தோஷம் மூன்று - வாதம், பித்தம் சிலேத்துமம்.

தோற்றங்கள் ஏழு - காண்க: ஏழு வகைத் தோற்றங்கள்.

நசை விரும்புதல் - ஈரம், குற்றம், அன்பு

நடலை -வருத்தல், வஞ்சனை பொய்.

நடுவர் - யமன்

நந்தாத - அழியாத

நரலை - ஒலி: கடல், மதில் உறுப்பில் ஒன்று.

நறை - தேன்; வாசனைகள்

நாடி - பிராணவாயு இயங்கும் பத்து நாடிகளாவது இடைகலை, பிங்கலை சுழுமுனை காந்தாரி அத்தி, சிங்குவை; அலம்புடை, புருடன் சங்கினி, குரு ஒலி (தசநாடிகள்)

நாதவிந்து - ஒலி முதல்

நாலாம்பதம் - சிவசாயுச்சிய பதவி

நாவி - நாபி - கொப்பூழ்

தூலிக் கமலம் - மணிபூரகம்

நான்குபதம் -சரியை, கிரியை;

யோகம் - ஞானம்.

நான்குபதம் பலன்கள் - சரியையினால் அடையும் பலம் சிவசாலோக்கியும் கிரியையினால் அடையும் பலம் சிவசாமீப்பியம். யோகத்தினால் அடையும் பலம் சிவசாரூப்பியம் இவை மூன்றும் பதமுத்தி ஞானத்தினால் அடையும் பலம் சிவசாயுச்சியம் இது பரம முத்தி.

நான்கு வகைக் கரு-முட்டையிற் பிறப்பது அண்டசம். வியர்வையிற் பிறப்பது சுவதேசம், வித்துவேர் முதலியவற்றில் தோன்றுவது உற்பீசம், நீரிற் பிறப்பது சராயுசம்.

நிட்களம் - உருவம் அற்றது

நிலமன் - இறைவன்

நிராமயம் - நோயின்னம

நெடியகம் - அகங்காரம்

நேதி - முறை

பசை - அன்பு ஈரம்; சாரம்

பஞ்சாவஸ்தைகள் - சாக்கிரம் சொப்பனம்; சுழுத்தி; துரியம்; துரியாதீதம் இவை தமிழில் முறையே நனவு; கனவு; உறக்கம், பேருறக்கம் உயிர்ப்படக்கம் எனப்படும்.

பஞ்சகோசங்கள் - காண்க; கோசங்கள்

பஞ்சபூதம் - மண், நீர், தீ, காற்று, ஆகாயம் (காண்க; ஐம்பூத காரியங்கள்)

பஞ்சரம் கூடு - உடம்பு

பஞ்சரித்தல் - விரித்துப் பேசுதல் கொஞ்சிப் பேசுதல், கெஞ்சிக் கேட்டல்.

பஞ்ச சிவ தத்துவங்கள் - சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம் சத்தி, சிவம், அகக்கரணம் இவை தமிழில் முறையே தூய நினைவு தலைமை அருள் நிலை அன்னை அத்தன் உட்கருவிகள் என ஐந்து சிவ நிலையப் பொருட்கள் எனப்படும்.

பஞ்சாக்ஷரம் - சைவர்களால் இஷ்டகாமியசித்திகளை விரும்பியும் முத்தியை விரும்பியும் ஜெபிக்கப்படும் மகாமந்திரம் போக பஞ்சாக்ஷரம்; முக்தி பஞ்சாக்ஷரம் ஸ்தூல பஞ்சாக்ஷரம்; ஸ்தூல பஞ்சாக்ஷரம் சூட்சும பஞ்சாக்ஷரம் எனவும் இது பல வகைப்படும் இவற்றின் ஆக்ஷரங்களை மாறி ஜெபிப்பதால் பலன்கள் வேறுபடும். விரும்பும் பலன்களுக்கு ஏற்ப ஞானாசிரியர்கள் கூறும் முறையில் மாறி ஜெபிக்க வேண்டும் இந்த மகா மந்திரத்தைப் பிரணவத்துடனும். பீஜா க்ஷரத்துடனும் சேர்த்தும் அதில்லாமலும் ஜெபிப்பதுண்டு.

பஞ்ச ஞானேந்திரியங்கள்- தொக்கு சிங்குவை சட்சு; ஆக்கிராணம் சோந்திரம் இவை தமிழில் முறையே மெய் வாய் கண், மூக்கு செவி என ஐம்பொறிகள் எனப்படும்.

பஞ்ச கன்மேந்திரியங்கள் - பாணி, பாதம் , வாக்கு பாயுரு, உபத்தம், இவை தமிழில் முறையே கை கால், வாய், எருவாய் கருவாய் என மூன்று தொழிலுறுப்புகள் எனப்படும்.

பஞ்சாசயங்கள் - அமர்வாசயம் பகிர்வாசயம் சலவாசயம் மலவாசயம் இவை தமிழில் முறையே இரைக்குடல், செரிகுடல், நீர்க்குடல், மலக்குடல் வெண்ணீர்க்குடல் எனப்படும்.

படி - பூமி, முறைமை

படிறு - பொய் களவு

படைத்தல்- ஆன்மாக்களுக்கு தனுகரண புவன போகங்களை முதற் காரணத்தினின்று தோற்றுவித்தல்.

பட்டோலை - விடுக்கும் ஓலை.

பணத்தி - பணிப்பெண்

பணிக்கன் - வைத்தியன்; உபாத் தியாயன்; நாவிதன்.

பண்டி - வயிறு, வண்டி

பதணம் - மதிலுள் மேடை

பதம் - (காண்க; நான்கு பதம்)

பதவி நான்கு - சாலோகம் சாமீபம் சாரூபம், சாயுச்சியம் (காண்க, நான்கு பதம் பலன்கள்)

பதி, பசு, பாசம் - பதி என்பது சிவன், பசு என்பது ஆன்மா, பாசம் என்பது ஆன்மாவை பந்தித்து நிற்கும் மலங்கள்.

பதினாலுலோகம் - பூலோகம் சுவர்லோகம் அமர்லோகம் கனலோகம் தபோலோகம் மகாலோகம் சத்தியலோகம் எனும் மேல்லோகங்கள் ஏழும் அதலம், விதலம், சுதலம், தலாதலம், மகாதலம், இரசாதலம், பாதாலம் எனும் கீழ்லோகங்கள் ஏழும் சேர்ந்து பதினாலு லோகங்களாகும்.

பதினெண்சித்தர்கள் திருமூலர் இராமதேவர், கும்பமுனி, இடைக்காடர். சட்டைமுனி குதம்பைச்சித்தர் கோரக்கர் வால்மீகி சுத்தானந்ததேவர் தன்வந்திரி, கமலமுனி, போகநாதர் மச்சமுனி, கொங்கணர், பதஞ்சலி, நந்திதேவர், போதகுரு பாம்பாட்டி.

பத்தம் - கட்டு, குவியல்

பத்தியம் பாட்டு நன்மை

பத்துத் திசை - எட்டுத் திசைகளும் ஆகாயமும், பூமியும்

பம்பை - முல்லைப்பறை

பவம் - பிறப்பு, பாவம், உலகம்

பவுரி ஒருவிதக் கூத்து

பற்பம் - பஸ்பம், தாமரை, தூள்

பாசம்- ஆன்மாக்களைப் பந்தித்து நிற்பவைகள் பாசத்தை மலம் எனவும் கூறுவர் இதன் வகைகள் ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்கள் இம்மூன்றோடு மாயேயம் திரோதாயி என இரண்டையும் சேர்த்து பாசம் அல்லது மலம் ஐந்து எனக் கொள்வதும் உண்டு.

பாணன் - தையற்காரன் பாட்டுப் பாடிப் புகழ்பவன்; வீணன்

பாதம் - (காண்க: சிவாகம பாதம்)

பாமம் - சினம், பரப்பு பிரபை

பாற்றுதல் - நீக்குதல் ஓட்டுதல்,

பானு - சூரியன்.

பிங்கலை - சூரியகலை வலமூக்கு, மூச்சு

பிணிமூன்று - வாதம் - பித்தம் கபம்.

பிரஞ்ஞை - முன் நிகழ்ச்சியை அறியும் அறிவு.

பிரத்தியாகாரம் - ஐந்தவித்தல்

பிராகாமியம் - கூடுவிட்டுக் கூடு பாய்தல் (நிறைவுண்மை)

பிராப்தி - எல்லாவற்றையும் ஆளுதல் (விரும்பிய தெய்தல்)

பிருதிவி - மண் ; பூமி

புங்கம் -  உயர்ச்சி, மெல்லாடை, குவியல்.

புரியட்டகாயம் - சூக்கும தேகம்.

புலன் ஐந்து - சுத்தம் , ஸ்பரிசம் ரூபம், ரசம், கந்தம்

புற்கலன் - உயிர்

பூதங்கள் - (காண்க; ஐம்பூதங்கள்)

பூதி - திருநீறு, சிங்காரம், செல்வம்

பூதியம் - பஞ்ச பூதங்கள், உடல்

பூரகம் - மூச்சை உள்ளிழுத்தல்.

பொதும்பு பொந்து குகை, குறுங்காடு

பொருள் மூன்று - பதி, பசு, பாசம்.

பொள்ளல் - தொளைத்தல், உள்- வைரம் இல்லாதது.

பொறியிலி புலன்களைக் கடந்த இறைவன்.

போதம் - அறிவு, ஞானம்

மகத்தான வஸ்து - மகத்துவமான வஸ்துவையும் (மகத்துவ மான பொருள்கள் மேல் உலகத்தில் உள்ள சிந்தாமணி, கற்பகம், காமதேனு ரம்பை)

மகிமா - மேருவைப் போலப் பெரிதாதல், (பருமை)

மசகம் - கொசு நீர்த்துருத்தி

மஞ்சனம் - அபிஷேகம் முழுகல்.

மண்டலங்கள் ஏழு - வாயு, வாருணம், சந்திரன், சூரியன், நட்சத்திரம், அக்கினி, திரிசங்கு.

மண்டலம் மூன்று - அக்கினி மண்டலம், ஆதித்த மண்டலம், சந்திர மண்டலம்.

மணிபூரகம் நாபியிடத்தில் (கொப்பூழிடத்தில்) சுவாதிட்டானத்தின் மேலாக 10 இதழ்த் தாமரை போன்ற தானம்.

மதிரம் - மதிரை, கள்.

மலம் மூன்று - 1 ஆணவம், 2. கன்மம், 3. மாயை.

மலம் ஐந்து- 1. ஆணவம் 2. கன்மம், 3. மாயை, 4. மாயேயம், 5. திரோதானம்

மலைமேல் இருப்போர்க்கு- மேலோன சமாதி நிலையில் இருப்பவர்களுக்கு

மவ்வெழுத்து - மலவெழுத்து மறவி -யமன்

மனக்கரணம் - அகக்கரணங்கள்.

மனு- மனிதன், மந்திரம் தரும நூல்.

மனோலயம் - மன ஒடுக்கம்

மாகதர் - பாணர், பாடகர்

மாகம் - ஆகாயம் , மேகம், தேவர் உலகம்.

மாங்காய்ப் பால் - மாங்காய் என்பது பிரமம். பால் என்பது அதன் அனுபவம் மாங்கிசம் -கூமாமிசம்

மாயை மூன்று -1. சுத்தமாயை 2. அசுத்தமாயை, 3. பிருகிருதி மாயை . (விந்து, மோகினி மான் எனவும் கூறுவர்.)

மார்க்கம் நான்கு - சரியை, கிரியை, யோகம், ஞானம்.

மிடறு - கழுத்து, தொண்டை.

மித்தை - மித்தியை, பொய்.

மிவ்வை ஒத்த ஞானிகள் - நற்குணம் நிறைந்த ஞானிகள்.

முக்கனி - மர, பலா, வாழை, இவற்றின் கனிகள்.

முக்குணம் - இராசதம், தாமசம் சாத்வீகம் (சத்துவம்) எனத் திரிகுணம் எனப்படும்.

முக்குண மடமை - இராசத தாமச சாத்வீகமாகிய முக்குணத்தினால் அறியாமை.

முத்திவிக்கினம் மூன்று- அறியாமை, ஐயம், திரிபு.

முத்தி - ஆகவநீயம் தக்கினாக்கி நியம், காருகபத்தியம் எனும் மூன்று அக்கினிகள் (இவை வேதாக்கினி)

முந்நீர் - கடல்

முந்நூல் - பூணூல்

முப்பத்தறுவர் - முப்பத்தாறு தத்துவங்கள்.

முப்பாழ்- விந்து, மோகினி, மான் ஆகிய மூன்று மாயை.

மும்மலம் - (காண்க; மலம்)

முயக்கம் - புணர்ச்சி, தழுவுதல், பொருத்தம்.

முவ்வகைக் காட்சி 1. தத்தவ தரிசனம் 2. ஆன்ம தரிசனம். 3. சிவதரிசனம்.

முறி- எழுத்து ஓலை,பத்திரம்

மூக்கு மூனை - சுழுமுனை

மூரல்- பல், புன்சிரிப்பு

மூலாதாரம்- (குதம்) ஆறு ஆதாரங்களுள் குய்யத்துக்கும் குதத்துக்கும் இடையே இருக்கும் 4 இதழ் தாமரை போன்ற சக்கரம்.

மூவாசைகள் - மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை.

மூவேடனை - அர்த்த வேடனை, புத்திர வேடனை, யோக வேடனை இதை தமிழில் முறையே பொருட், பற்று, புதல்வர் பற்று, உலகப் பற்று எனப்படும்.

மேதி - எருமை, நெற்களம்.

யாகம் ஐந்து - பிரமம், தெய்வம், பூதம், பிதிர் மானுடம்.

யோகக் காட்சி - யோகத்தால் அறியும் அறிவு.

யோக நித்திரை - அறிதுயில் தியான நிஷ்டை.

யோகம்- உபாயம் புணர்ச்சி உணர்ச்சி, நற்சுழி கூடல், மருந்து, யுக்தி, அதிர்ஷடம், நூல் தியான நிட்டை.

யோகம்- விஷயங்களின் வழியே போகாத வண்ணம் மனத்தை நிலை நிறுத்தி சிவத்தை தியானித்துப் பின்பு தியானிப் போனாகிய தானும் தியானமும் தோன்றாது தியானப் பொருளாகிய சிவம்- ஒன்றே விளங்கப் பெறுதல்.

வங்கிசம் - வமிசம்

வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல் (கவர்ச்சி)

வண்டினெச்சில் - தேன்

வவ்வெழுத்து - சத்தியெழுத்து

வழும்பு - அழுக்கு , நிணம், குற்றம் தீங்கு

வாக்காதிஐவர் - வாக்கு, பாதம் பாணி: பாயுரு; உபத்தம், ஆகிய கன்மேந்திரியங்கள்

வாகுவலயம் - தோள் அணி

வாசவன் - இந்திரன்

வாசம் கோசரம் -வாக்கிற்கு எட்டாதது.

வாசி - பிராண வாயு

வாயில்-(வாசல்) ஒன்பது:  கண் 2. காது 2. மூக்குத் துவாரம் 2. வாய் 1. குதம் (நீர் கழிக்கும் வாயில் ) குய்யம் (மலங்கழிக்கும் வாயில்).

வாயு பத்து - பிராணன், அபானன், சமானன்: உதானன் வியானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்செயன், (காண்க; தக்வாயு)

வாயுத்தம்பம் - வாயுவை நிறுத்தல்.

வாயுவது கோணம் - விசுத்தி

வாய் விழைச்சு - உமிழ்நீர்

வாரணம் - யானை, சங்கு, கவசம்

வாரணன் - கணபதி

வாலை- வாலாம்பிகை, கன்னிப் பெண்

விசுத்தி -  அடி நாவின் இடம் அனாகத்திற்கு மேல் பதினாறிதழ்த் தாமரை; வடிவினதாகக் கருதப்படும் அடிநாத்தானம்.

விடக்கு - ஊன்

விதனம் - துயரம்

வித்தியா தத்துவங்கள் - கலை, காலம், நியதி, வித்தை, அராகம், புருடன், மாயை.

வித்தைகள் பதினான்கு- வேதம் 4 வேதங்கள் 6. உபாங்கம் 4.

விபுலை - அம்பிகை, பூமி;

விரகு - விரகதாபம், காம உணர்ச்சி.

விரளயம்- நீக்கம், இடைவெளி விசாலம்.

விள்ளல்- பேசுதல், சொல்லுதல்.

வீணாத்தண்டு - முதுகெலும்பு;

வெட்டவெளி - சிதாகாசம்

வெண்குணத்தான் - அறிவற்றவன்

வெளியிற் வெளி- பூதாகாயத்திற் சிதாகாயம்.

வேட்டுவன் - குளவி, வேடன்

வேதங்கள் நான்கு- இருக்கு வேதம், யசுர்வேதம்,  சாமவேதம், அதர்வணவேதம், உபவேதங்கள் , ஆயுர் வேதம் அருத்த வேதம், தனுர் வேதம், காந்தர்வ வேதம்.

வேதா - பிரமன்

வேதாங்கம் ஆறு - சிக்ஷை, வியாகரணம், நிருத்தம், சோதிடம், கற்பம், சந்தசு.

 
மேலும் பட்டினத்தார் திருப் பாடல் திரட்டு »
temple news
நினைமின் மனனே! நினைமின் மனனேசிவபெரு மானைச் செம்பொனம் பலவனைநினைமின் மனனே! நினைமின் மனனே!அலகைத் தேரின் ... மேலும்
 
5. திருமால் பயந்த திசைமுகன் அமைத்துவரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்துமலைமகள் கோமான் மலர் அடி ... மேலும்
 

திரு ஏகம்ப மாலை நவம்பர் 06,2015

(திருக்கச்சி ஏகாம்பரநாதரைத் துதித்துப் பாடிய மாலை)1. அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி அதிகம் ... மேலும்
 

திருத் தில்லை நவம்பர் 06,2015

1. காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்தாம்பிணங் கும்பல ஆசையும் விட்டுத் ... மேலும்
 
temple news
1. ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar