திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. ஆண்டு தோறும் திண்டுக்கல் அருகே சிறுமலை வெள்ளிமலை அடிவாரம் தியானப்பாறை அருகில் அகத்திய மகரிஷியின் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நேற்று விழா நடந்தது. விழாவையொட்டி காலை 8.30 மணிக்கு கோபூஜையும், மகா யாகமும் நடந்தது. பின், 1008 அஷ்ட அதிக சகஸ்ர கும்ப கலசாபிஷேகம் நடந்தது. பக்தர்களின் கரங்களாலேயே கும்பமுனிக்கு அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு, காலையிலிருந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வெள்ளியங்கிரி ஆண்டவர் அன்னதானக்குழு, திண்டுக்கல் அகத்தியர் பெருமாள் வெள்ளிமலை கோயில் டிரஸ்டும் இணைந்து செய்திருந்தன.