Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள் 7 : ... ஸ்ரீ ஐயப்ப பகவதி அம்மன் கோவில் திருவிழா ஸ்ரீ ஐயப்ப பகவதி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தபுத்தூரில் கோ பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2011
11:08

அரியலூர்: கோவிந்தபுத்தூர் சிவன்கோவிலில் நடந்த கோ பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் விக்கிரங்கலம் அருகே கோவிந்தபுத்தூரில் மங்களாம்பிகை உடனாய கங்கா ஜடேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. கோவந்தபுத்தூர், கோ கரந்த புத்தூர் உள்ளிட்ட பல்வேறு காரண பெயர்களுடன் விளங்கும் கோவிந்தபுத்தூர் கிராமத்தில், கொள்ளிடம் ஆற்றின் வடகரை தலமாகவும், ஆயிரம் ஆண்டுகளை கடந்த பாரம்பரியம் மிகுந்ததுமான இந்த சிவாலயத்தில், நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர், திருவிச மங்கை எனப்படும் தேவாராம் பாடியுள்ளார். பலா மரத்தின்கீழ் புற்றுக்குள் இருந்த சிவலிங்கத்தை, பசு பால் சொரிந்து வெளிப்படுத்திய புராண பெருமையுடன், பல முனிவர்கள் மற்றும் அர்ச்சுணன் உள்ளிட்டோரால் வழிபாடு செய்யப்பட்டதுமான இத்தலத்தில், ஆடி பூரத்தை முன்னிட்டு, உலக நன்மையை கருதி கோ பூஜை விழா நடந்தது. திருவாவடுதுறை 23வது ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் ஆசியுடனும், கும்பகோணம் இறைபணி திருக்கூட்டம் சார்பில் நேற்று முன்தினம் நடந்த கோ பூஜையில், கோவிந்தபுத்தூர் மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் தங்களது பசுக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பங்கேற்றனர். திருவடிக்குடில் ஸ்வாமிகள் தலைமையில் பக்தி சிரத்தையுடன் நடந்த கோ பூஜை விழாவில், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் செயலாளர் தமிழரசன், நிர்வாகிகள் கிருஷ்ணன், மணிகண்டன், சேதுராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar