பதிவு செய்த நாள்
02
ஜன
2016
02:01
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், நம்மாழ்வார் மோட்ச வைபவ நிகழ்ச்சி நடந்தது.
மார்கழி மாதத்தையொட்டி, பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், மார்கழி உர்சவ சிறப்பு பூஜைகள் கடந்த மாதம் முதல் நடந்து வருகிறது. கடந்த மாதம் தசமி (20,21,22ம் தேதிகள்) ஆகிய நாட்களில், முத்தங்கி சேவையில் மூலவப்பெருமாள் காட்சியளித்தார்.
கடந்த மாதம் 21ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்க வாசல் சிறப்பு
நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து, காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு
பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, ஜன., 1ம் தேதி முன்தினம் நம்மாழ்வார் மோட்ச வைபவ நிகழ்ச்சி நடந்தது. இதில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் கோவிலைச் சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும்; ஆழ்வார் பல்லக்கில் வலம் வரும் நிகழ்ச்சியும் இடம்பெற்றன. தொடர்ந்து ஆழ்வாருக்கு மோட்ச வைபவம் நடந்தது, இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.