துருப்பிடிக்காத குப்பை தொட்டிகள் ராமேஸ்வரம் பக்தர்கள் வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2016 11:01
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கடல் காற்றில் துருப்பிடிக்காத குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை பக்தர்கள் வரவேற்றனர். ராமேஸ்வரத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பையில் உரம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக நகராட்சி, விவேகானந்தர் கேந்திரம் சார்பில் அக்னி தீர்த்தம் கரை, கோயில் நான்கு ரதவீதி, வாகனம் நிறுத்துமிடம் உட்பட 10 இடங்களில் குப்பையை தனித்தனியாக சேகரிக்க 3 தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் குப்பை தொட்டியில் மக்கும், மக்காத குப்பையின் பயன், தீமைகள் குறித்து விழிப்புணர்வு வாசகம் படத்துடன் இடம் பெற்றுள்ளது. இதனால் ரோடுகளில் குப்பை கொட்டுவது குறைந்துள்ளது. நகராட்சி சுகாதார அலுவலர் அய்யப்பன் கூறியதாது: பசுமை ராமேஸ்வரம் திட்டத்தில், 10 இடத்தில் உப்பு காற்றில் துருப்பிடிக்காத வகையில் மக்கும், மக்காத, மறுசுழற்சி குப்பையை தனித்தனியாக சேகரிக்க 3 தொட்டிகளை வைத்துள்ளோம். இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, என்றார்.