கொடிய வெயிலின் துணியை காய வைத்தால் அது வெதும்புமே அன்றி வெந்து சாம்பலாகாது. லென்சை வெயிலில் வைத்து, அதன் கீழ் வரும் வெயிலில் துணியை வைத்தால், உடனே அது சாம்பலாகும். மற்ற இடங்களில் வழிபடுவதால் வினைகள் வெதும்பும். கோயிலில் வழிபட்டால் வினைகள் வெந்து சாம்பலாகும்.