சோளிங்கர் அருகில் உள்ள இரட்டை மலை யோக நரசிம்மசுவாமி கோயிலில் யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இவரை வணங்க மலையில் 1500 படிகள் ஏற வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்குள்ள சின்னமலையில் சங்கு சக்கரத் துடன் கூடிய மற்றொரு ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார். இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி 12 நாட்கள் அனுமனைத் தொடர்ந்து தரிசித்து வருவது சிறப்பாகும். 108 முறை இவரை வலம் வரவேண்டும். இங்குள்ள பெருமாளை 48 நாட்கள் தரிசித்தால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.