Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பழநி தைப்பூச விழா பாதுகாப்பு 4 ஆயிரம் ... அகத்தியர் சுத்திகரணம் செய்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கும்பாபிஷேக ஏற்பாடு : அறநிலை ஆணையர், கலெக்டர் ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2016
12:01

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோயில் தங்கவிமான கோபுரத்திற்கு வரும் 20ல் கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு ஏற்பாடு தீவிரமடைந்துள்ளது. இதை அறநிலையத்துறை ஆணையர், கலெக்டர் நேரில் ஆய்வு செய்தனர். ஜன. ,16 முதல் ஆடிப்பூர கொட்டகையில் யாகசாலை பூஜைகள் துவங்க, 20 காலை 9 மணிக்குமேல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை , மாவட்ட நிர்வாகம் துரிதபடுத்தி வருகிறது. இது தொடர்பாக இரு முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தபட்டு, முன்னேற்பாடுகள் செய்வது குறித்து துறைவாரியாக விவாதிக்க பட்டது. விமானகோபுரத்தில் தங்கதகடுகள் பணி முடிவடையும் தருவாயிற்கு வந்துள்ளது. கோயில் மற்றும் அதை சுற்று பகுதிகளில் தூய்மைபணி நடந்து வருகிறது.

சுவாமி தரிசனம்: 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கபடும் நிலையில் அவர்கள் கும்பாபிஷேகத்தை இடையூறின்றி காணவும், தங்கவிமானகோபுரத்தை பார்வையிடவும், சுவாமி தரிசனம் செய்யவும் தேவையான ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் ராமராஜா தலைமையில் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

சிறப்பு பஸ்கள்: கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காண்பதற்கு நான்கு ரதவீதிகளிலும் எல்.இ.டி., திரை அமைக்கபடுகிறது. நாராயண குருவையா மண்டபம், ஜெயராம் ஷெட், ராமராஜ் திருமண மண்டபங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. சிறப்பு பஸ்கள், தீயணைப்பு வண்டிகள், தடையில்லா மின்சாரம், மருத்துவ வசதி, கழிப்பிட வசதி உட்பட பல அடிப்படை வசதிகள் செய்யபட உள்ளது. இது தொடர்பான பணிகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி, கலெக்டர் ராஜாராமன் பார்வையிட்டு கும்பாபிஷேக பணிகளை தீவிரபடுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
மதுரை: " குருவை மறந்தவனுக்கு எப்பயனும் கிடைக்காது; அவரை வணங்கினால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும்" என ... மேலும்
 
temple news
நெகமம்: நெகமம், மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், இன்று சுவாமி திருவீதி உலா நடக்கிறது.நெகமம், ... மேலும்
 
temple news
உடுமலை: பூமிலட்சுமியம்மன் கோவில் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீகோட்டை மாரியம்மன் பொங்கல் விழா, நேற்று கோலாகலமாக நடந்தது; பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar