Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி பக்தர்கள் முதுகில் ஒளிரும் ... கோவை கோவிலில் ராகு – கேது பெயர்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் மீண்டும் பாலிதீன் அபாயம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2016
12:01

சபரிமலை: சபரிமலையில் பாலிதீனை எப்படி தடுப்பது என்று தெரியாமல் தேவசம்போர்டு தடுமாறுகிறது. சன்னிதானம் அருகே இறந்த மிளா வயி ற்றில் நான்கரை கிலோ பாலிதீன் எடுக்கப்பட்டது. இதுபற்றி கேரள ஐகோர்ட் கவலை தெரிவித்துள்ளது. சபரிமலையில் பாலித்தீன் உபயோகத்தை  தடுக்க தேவசம்போர்டும், கேரள அரசும் பகீரத முயற்சி மேற்கொண்டு வருகிறது. விழிப்புணர்வு துண்டு பிரசுரம், வீடியோ பிரச்சாரம், அறிவிப்பு ÷ பார்டுகள், சபரிமலை பாதைகளில் பக்தர்கள் கொண்டு வரும் பாலிதீன் பைகளுக்கு பதிலாக துணிபைகள் வழங்குவது என்று பல வித முயற்சிகள்  மேற்கொண்டு வருகிறது. என்றாலும் தினமும் டன் கணக்கில் பாலிதீன் குப்பைகள் குவிகிறது. கடந்த நவம்பர் தொடக்கத்தில் சபரிமலை காட்டில் ஒரு  யானை இறந்த போது அதன் வயிற்றில் இருந்து பாலிதீன் கழிவுகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதை வனத்துறை ஐகோர்ட்டில் தெரிவித்தது. இதை  தொடர்ந்து பாலிதீனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும் படி ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த நவ.27-ல் மண்டல பூஜை முடிந்து  நடை அடைத்த பின்னர் சன்னிதானம் அருகே ஒரு மிளா இறந்து கிடந்தது. அதன் உடலை பரிசோதனை செய்த போது வயிற்றில் இருந்து நான்கரை  கிலோ பாலிதீன் எடுக்கப்பட்டது. இதுபற்றி வனத்துறை கேரள ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது. இதுபற்றி கோர்ட் கவலை தெரிவித்துள்ளது. பாலிதீன் பைகளில் உணவு பொருட்களை கொண்டு வரும் பக்தர்கள் அதை சாப்பிட்டு விட்டு வீசி எறிகின்றனர். இவற்றை எரிக்க இன்சிலேட்டர்  இருந்தாலும் ஏராளமான குப்பைகள் காட்டுக்குள் வீசப்படுகிறது. இதன் மணம் படித்து வரும் விலங்குகள் அவற்றை சாப்பிடுகிறது. காட்டுக்குள் கு ப்பைகளை வீசக்கூடாது என்று கூறி தேவசம்போர்டுக்கு வனத்துறை சார்பில் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. பாலிதீனை தடுப்பது எப்படி  என்று தெரியாமல் தேவசம்போர்டு திணறி வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீபெரும்புதுார்; மார்கழி மாத செவ்வாய் கிழமையான இன்று சாமந்தி, வெற்றிலை உள்ளிட்ட மாலைகளால் ... மேலும்
 
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் நாளான இன்று  நம்பெருமாள் மஞ்சள் வண்ண ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் இன்று டிச.,23ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு அவதுாத தத்த பீடத்தின் தலைவர் ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கால்நடைகளை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களுக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar