பதிவு செய்த நாள்
06
ஜன
2016
12:01
கோவை: ஆலாந்துறை, பெருமாள் கார்டன், நாகசக்தி மையம், ராகு கேது கோவிலில், ராகு – கேது பெயர்ச்சி விழா, 8ம் தேதி நடக்கிறது. ஸ்ரீராம் சி வாச்சாரியார் தலைமையிலான, சிறப்பு பரிகார வேள்வி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூஜையில், 108 தீர்த்த கலசங்களுடன் கூடிய அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடக்க உள்ளது. மேலும், அங்குள்ள, 27 நட்சத்திர மரங்களுக்கும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இத்தகவலை, நாகசக்தி மைய நிறுவனர் ரங்கராஜூ தெரிவித்தார்.
மாதேஸ்வரர் கோவில்: மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் உள்ள மாதேஸ்வரர் கோவிலில், வருகிற, 8ம் தேதி ராகு,கேது பெயர்ச்சி விழா மற்றும் வேள்வி நடைபெறுகிறது. காலை, 8:00 மணிக்கு விநாயகர் வழிபாடும், சிறப்பு வேள்வியும் துவங்குகிறது. அடுத்து, 9:30 மணிக்கு பரிகார சங்கல்ப பூஜைகளும், பகல், 12:00 மணிக்கு ராகு–கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளும் நடைபெறுகின்றன.தொடர்ந்து மகா தீபாராதனையும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. வேள்வியை ஜோதி வேலவன் நடத்த உள்ளார். ஏற்பாடுகளை நந்தவனம் வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் திருச்சபை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.