அம்பிகை வழிபாட்டில் துர்க்கை, காளி, மாரி ஆகியோருக்கு மகிமை அதிகம். துர்க்கா என்றால் துன்பத்தைப் போக்குபவள் என்றும் அர்த்தம் உண்டு. இவள் எட்டுக் கைகளோடு விளங்கும் போது, அஷ்டபுஜ துர்க்கை என்ற திருநாமம் பெறுகிறாள். தன்னைச் சரணடையும் பக்தர்கள் எட்டுத்திசைகளில் எங்கு சென்றாலும் அவர்களுடன் இருந்து, எந்தவிதத் தீங்கும் நேராமல் கோட்டை போல பாதுகாப்பதாக ஐதிகம்.