பெருமாள் கோயில்களில் தாயாரை வழிபட்ட பின்னரே பெருமாள் சன்னதிக்குச் செல்வர். தாயாரிடம் நம் விருப்பத்தைச் சொல்லி வழிபட்டால் பெருமாளுக்கு அதை எடுத்துரைத்து விரைவில் நிறைவேற்ற அருள்புரிவாள் என்பது ஐதிகம். விஷ்ணுவுக்கு ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய மூன்று தேவியர் உண்டு. இவர்களால் ஸ்ரீதேவியை வழிபட செல்வவளம், ஞானம் கிடைக்கும். பூதேவி கருணை, பக்தியைத் தருவாள். நீளாதேவியால் தியாகம் நற்குணம் உண்டாகும்.