உஜ்ஜயினி காளியம்மன் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2016 12:01
காரைக்கால்: காரைக்கால் ஆற்றங்கரை என்.எஸ்.சி., போஸ் வீதியில் உள்ள உஜ்ஜயினி காளியம்மன் கோவிலில் வரும் 24ம் தேதி மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை அமைப்பதற்காக பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடந்தது. சிவாச்சாரியார் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை செய்து, கோவில் நுழைவாயில் அருகில் பந்தக்கால் நடப்பட்டது. திருப்பணிக்குழு தலைவர் வெற்றிச்செல்வம்,கோவில் தனி அதிகாரி ஆசைத்தம்பி, உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.