உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, வரும் மார்ச் 24ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்குகிறது. 31ம் தேதி, கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம், ஏப்., 9ம் தேதியும் நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்வது குறித்து மண்டகபடிதாரர்கள், உபயதாரர்கள் மற்றும் சமூக தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம், கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது.
அறங்காவலர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். செயல் அலுவலர் தீபா முன்னிலை வகித்தார். இதில், தேர்த்திருவிழாவை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.