பதிவு செய்த நாள்
08
ஜன
2016
12:01
அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம், ராமர் கோவில், நந்தவன ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா, நாளை நடக்கிறது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, இன்றும், நாளையும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இன்று காலை, ௧௦ மணி அளவில், கணபதி ஹோமம் நடக்கிறது. நாளை காலை, ௫ மணி அளவில், ஆஞ்சநேயருக்கு ஹோமம் நடக்கிறது. இதை தொடர்ந்து, காலை, ௬ மணி அளவில், பால் குடமும், ௬.௩௦ மணி அளவில், அபிஷேகமும், இதை தொடர்ந்து, அன்னதானமும் நடக்கிறது.