காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆளவந்தார் திருஅவதார மகோற்சவ விழாவில் சுவாமிக்கு தையலக்காப்பு நடந்தது. காட்டுமன்னார்கோவில் புகழ் பெற்ற வீரநாராயண பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆளவந்தார் திருஅவதார விழா கடந்த 2ம் தேதி திருப்பல்லாண்டுடன் துவங்கியது. 3ம் தேதி உத்சவ துவக்க விழா நடந்தது. 11 நாட்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் காலை திருப்பல்லக்கில் வீதி புறப்பாடும், மதியம் திருமஞ்சனம், மாலை மங்களகிரியில் திருவீதி புறப்பாடு, இரவு சாற்று முறையும் நடந்து வருகிறது. நேற்று (9ம் தேதி) மூலவர் வீரநாராயண பெருமாளுக்கு தையலக்காப்பு, திருமஞ்சனமும் நடந்தது. 11ம் தேதி தீர்த்தவாரி திருமஞ்சன புறப்பாடும், நிறைவு நாளான 12ம் தேதி காலை மங்களாசாசனம், கருட சேவையும் அதனைத் தொடர்ந்து மதியம் திருமஞ்சனமும், இரவு சாற்று முறையும் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், தக்கார் சிவக்குமார் செய்து வருகின்றனர்.