நாகலட்சுமி அம்மன் கோவிலில் ராகு – கேது பெயர்ச்சி பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2016 05:01
பெண்ணாடம்: ராகு, கேது பெயர்ச்சியொட்டி, பெண்ணாடம் நாகலட்சுமி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, காலை 10:00 மணியளவில் கோவில் வளாகத்தில் புனிதநீர் கலசம் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, 11:30 மணியளவில் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், 12:00 மணியளவில் சிறப்பு ேஹாமம், 12:15 மணிக்கு கலச அபிஷேகம், 12:37 மணியளவில் அம்மனுக்கு மகாத தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.