பதிவு செய்த நாள்
08
ஜன
2016
06:01
திருவாரூர்: திருப்பாம்புரம் கோவிலில்,ராகு–கேது பெயர்ச்சி விழா நடந்தது. திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடி அருகே அமைந்துள்ளது திருப்பாம்புரம் கிராமம். இவ்ஊரில்,பிரசித்தி பெற்ற வண்டுசேர்குழலி உடனுறை சேஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில், தனிசன்னதியில், பக்தர்களுக்கு ராகு–கேது கிரகங்கள் அருள் பாலிக்கின்றன. இங்கு ராகுவும்,கேதுவும் ஏக சரீரமாக அமைந்துள்ளன. நவகிரகங்களில், நிழல் கிரகங்களான ராகு பகவான், கன்னி ராசியில் இருந்து சிம்மராசிக்கும், கேதுபகவான் மீனராசியில் இருந்து கும்பராசிக்கும் பிற்பகல்,12:37 மணிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளன. ராகு – கேது பெயர்ச்சியை ஒட்டி, இக்கோவிலில் காலை,9:00 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாயின. காலை,10:00 மணிக்கு சிறப்பு பரிகார ேஹாமம்;11:00 மணிக்கு மஹாபூரணாகுதி;11:30 மணிக்கு ராகு–கேதுவுக்கு சிறப்பு பால் அபிேஷகம்; பிற்பகல், 12:37 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், ராகு–கேது பகவான்களை வழிபட்டனர்.