செல்வாம்பிகை பக்த அனுகிரக சக்தி பீடத்தில் அமாவாசை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2016 12:01
பெண்ணாடம்: அமாவாசையையொட்டி, பெண்ணாடம் மாந்தோப்பு தெரு, செல்வாம்பிகை பக்த அனுகிரக சக்தி பீடத்தில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, காலை 7:30 மணியளவில் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. 8:30 மணிக்கு வேள்வி பூஜை, 9:00 மணியளவில் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.