சென்னிமலையில் கோ பூஜை: பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2016 12:01
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், ஆண்டு தோறும் மார்கழி மாதம் முழுவதும் மார்கழி மாத விழாக்குழு சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும், மார்கழி, 1ம் தேதி முதல், தினமும் காலை, 6 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. முன்னதாக காலை, 5.30 மணிக்கு கோ பூஜை நடக்கும். பூஜைகளைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மார்கழி மாத கடைசி ஞாயிறு என்பதாலும், அமாவாசை நேரம் காலை, 8 மணி வரை இருந்ததாலும், நேற்றைய சிறப்பு பூஜைக்கு வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மார்கழி மாதத்தின் நிறைவு பூஜை வரும், 14ம் தேதி காலை நடக்கிறது. அன்று உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்த அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடக்கிறது. தீர்த்த அபிஷேகத்துக்காக, பக்தர்கள் நாளை, மேட்டுப்பாளையம் சென்று தீர்த்தம் எடுத்து வருகின்றனர்.