Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ... கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை ஆல்கொண்டமால் கோவில் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2016
12:01

உடுமலை : உடுமலை அருகே, பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் (மால கோவில்) திருவிழா, ஜன., 16ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட சோமவாரப்பட்டியில் அமைந்துள்ளது, ஆல்கொண்டமால் கோவில். உடுமலை சுற்றுப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில், விவசாயிகள் தங்கள் கால்நடைகளின் நலன் வேண்டி வழிபாடு நடத்துகின்றனர். இதற்கென தமிழர் திருநாள் திருவிழாவாக, இக்கோவில் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது, கால்நடைகளின் உருவ பொம்மைகளை வைத்து, விவசாயிகள் வழிபடுகின்றனர். திருமால் எழுந்தருளியுள்ள இக்கோவில் பகுதியில், சுயம்பாக உருவான லிங்க வடிவ புற்றுக்கு, மாடுகள் பால் சொரிந்தது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய ஆல்கொண்டமால் கோவிலில் தமிழர் திருநாள் திருவிழா, ஜன., 16 முதல், 18ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

விழா, 16ம் தேதி காலை, 5:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையுடன் துவங்குகிறது. காலை, 11:00 மணிக்கு சிறப்பு பூஜையும், மாலை, 6:00 மணிக்கு, உழவர் திருநாள் சிறப்பு பூஜையும் நடக்கிறது. 17ம் தேதி காலை, 5:00 மணிக்கு, சிறப்பு அலங்காரம், தீபாராதனையும், 11:00 மணிக்கு, சிறப்பு பூஜையும் நடக்கிறது. 18ம் தேதி, காலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையும், மாலை, 6:00 மணிக்கு, மகா அபிேஷகத்தை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்படுகிறது. இரவு, 7:00 மணிக்கு, மகா தீபாராதனையும், இரவு 9:00 மணிக்கு, சுவாமி வீதியுலா, வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்கிறது.வீதியுலா நிறைவில், சுவாமிக்கு மகா தீபாராதனை செய்யப்படுவதுடன், திருவிழா நிறைவு பெறுகிறது. உடுமலை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்இருக்குமென்பதால், கோவில் பகுதியில், பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி, பஸ் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அறநிலையத்துறை, போலீசார், வருவாய்த்துறை மற்றும் ஊர்பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar