பதிவு செய்த நாள்
11
ஜன
2016
12:01
விருத்தாசலம்: பிரதோஷத்தையொட்டி, விருத்தாசலம், பெண்ணாடம் கோவில்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விருத்தாசலம் விரு த்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், சுவாமி, தாயார், சண்முக சுப்ரமணியர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் நுாறு கால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், எலுமிச்சை, தேன், பஞ்சாமிர்தம் உட்பட 12 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது. கருவேப்பிலங்குறிச்சி சாலை ஏகநாயகர் கோவிலில் மாலை 4:30 மணியளவில் நந்தி பகவான், ஏகநாயகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
பெண்ணாடம்: பிரளயகாலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 4:30 மணியளவில் நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.