Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டாள் - கண்ணன் திருக்கல்யாண விழா ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஜ.ஜி., ஆய்வு ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஜ.ஜி., ஆய்வு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடையில் மாலை: முதல்வர் ஜெ.,வுக்காக சாத்தப்பட்டதாக புதிய சர்ச்சை
எழுத்தின் அளவு:
ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடையில் மாலை: முதல்வர் ஜெ.,வுக்காக சாத்தப்பட்டதாக புதிய சர்ச்சை

பதிவு செய்த நாள்

13 ஜன
2016
11:01

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வழக்கத்துக்கு மாறாக, ஆஞ்சநேயர் ஜெயந்தியன்று, ஒரு லட்சத்து, எட்டு வடையில் கோர்க்கப்பட்ட மாலை சாத்தப்பட்டது, முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து, முழுமையாக விடுபடுவதற்காக சாத்தப்பட்டதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. நாமக்கல் நகரின் மையத்தில், பிரசித்தி பெற்ற ஆஞ்சயேநர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தமிழகம் மட்டும் அல்லாமல், வெளிமாநிலம், வெளிநாடு போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை வழிபட்டுச் செல்கின்றனர். சுவாமிக்கு முழு அபி?ஷகம், வடமாலை சாத்துதல், வெள்ளி கவசம், முத்தங்கி, தங்க கவசம், தங்கத்தேர் இழுத்தல், வெண்ணெய் காப்பு அலங்காரம் போன்றவற்றுக்கு, குறிப்பிட்ட கட்டணம் கட்டளைதாரர்களிடம் வசூல் செய்யப்படுகிறது. கடந்த, 9ம் தேதி, ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு, அன்று அதிகாலை, 3 மணிக்கு, சுவாமிக்கு, ஒரு லட்சத்துக்கு, எட்டு வடைகள் கோர்க்கப்பட்ட மாலை சாற்றப்பட்டு, காலை, 11 மணிக்கு கலைக்கப்பட்டது. அதன்பின், ஆஞ்சநேயர் சுவாமிக்கு வழக்கம் போல் அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம், 2 மணிக்கு, தங்க கவசம் சாற்றப்பட்டு, சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

1,008 லிட்டர் பால்: ஒவ்வொரு ஆண்டும், ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று, சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டு, 1,008 லிட்டர் பாலாபி?ஷகம் செய்து, தங்ககவசம் சாத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில், ஒரு லட்சத்து, எட்டு வடைகள் கோர்க்கப்பட்ட மாலை சாற்றப்பட்டு, சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடந்தது அம்பலமாகியுள்ளது. மேலும், ஏற்கனவே அன்று அபிஷேகத்துக்காக முன்னதாகவே பணம் கட்டியவரை ஓரம்கட்டி விட்டு, வடமாலை சாத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

யாருக்காக, தெரியாது?
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ரமேஷ் கூறுகையில், உபயதாரர் வக்கீல் செந்தில் என்பவர், ஒரு லட்சத்துக்கு, எட்டு வடைகள் கோர்த்து மாலை சாற்ற வேண்டும் என, கோரினார்; அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மற்றபடி என்ன வேண்டுதலுக்காக, யாருக்காக அபிஷேகம் செய்யப்பட்டது என்பது தெரியாது, என்றார்.

தங்கத்தேர் இழுப்பு: இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: கடந்தாண்டு, ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று, சுவாமிக்கு அங்கவஸ்திரம், வேட்டி அளித்து, முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அவர், கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின், சபாநாயகர் தனபால், தொழில்துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்று, ஆஞ்சநேயருக்கு தங்கத்தேர் இழுத்தனர். வக்கீல் செந்தில், நாமக்கல்லை சேர்ந்தவர். எம்.பி.,யும், முன்னாள் டி.என்.பி.எஸ்.சி., தலைவருமான நவநீதகிருஷ்ணனின் நண்பராவார். மேலும், பெங்களூருவில் நடந்த வழக்கில், வக்கீல்கள் குழுவில் செந்திலும் ஒருவர். அவர், தற்போது, உச்சநீதிமன்றத்தில் நடக்கும், ஜெயலலிதா விடுதலையை எதிர்த்த அப்பீல் வழக்கில், ஜெயலலிதாவுக்கு சிறு தண்டனையோ, அபராதமோ விதிக்கூடாது என்பதற்காக, கட்சி தலைமை உத்தரவுபடி, ஒரு லட்சத்து, எட்டு வடைகள் கோர்க்கப்பட்ட மாலையை, சுவாமிக்கு சாத்தியுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, வக்கீல் செந்தில் கூறுகையில், அம்மாவுக்காக, அம்மா சார்பில், வடமாலை சாத்தப்பட்டது, என்றார். இது தொடர்பாக, நாமக்கல் நகரில், ஆஞ்நேயர் படத்துடனும், முதல்வர் ஜெயலலிதா படத்துடனும், வடமாலை சாத்துபடியில் கலந்து கொள்ளும்படி அனைவரையும் வரவேற்று பேனர்கள் வைத்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar