சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக் காளியம்மனுக்கு மார்கழி மாத அமாவாசையையொட்டி அர்த்த ஜாம சிறப்பு பூஜை நடந்தது. இதனையொட்டி விநாயகர் மற்றும் பிரச்சாமுண்டி அம்மனுக்கு நெய் தீபம் வழிபாடு நடந்தது. தொடர்ந்து தில்லைக்காளி அம்மனுக்கு குடம் நல்லெண்ணெய் அபிஷேகம், தைலக்காப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பால், தயிர், மற்றும் குளிர்ச்சியான பொருள்கள், வாசனை திரவியங்கள் போன்ற பொருட்களால் மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் தில்லைக் காளியம்மனுக்கு வெண்பட்டு சாற்றி, வெட்டிவேர், விளாமுச்சி வேர், செவ்வரளி பூ ஆகியவைகளால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து அமாவாசை தின சிறப்பு அர்த்தஜாம பூஜை, தீபாராதனை நடந்தது. பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.