Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றத்து முருகனுக்கு மண்பானை ... ரூ.77 லட்சத்துக்கு ஒரு லட்டு ஏலம்! ரூ.77 லட்சத்துக்கு ஒரு லட்டு ஏலம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகோயில் மகரசங்கராந்திப் பெருவிழா 2 டன் கிலோ காய்,கனி அலங்காரத்தில் நந்தி!
எழுத்தின் அளவு:
பெரியகோயில் மகரசங்கராந்திப் பெருவிழா 2 டன் கிலோ காய்,கனி அலங்காரத்தில் நந்தி!

பதிவு செய்த நாள்

16 ஜன
2016
12:01

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோயில், மகரசங்காரந்திப் பெருவிழாவை முன்னிட்டு இரண்டாயிரம் கிலோவில் ஆன காய், பழங்கள் வகையில் நந்தி பெருமானுக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிப்பாடும், 108 பசுமாடுகள் கோ பூஜையும் நடத்தப்பட்டன.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மிகப்பெரிய நந்திபெருமான் சிலை உள்ளது. இந்த நந்தி பெருமானுக்கு மகரசங்கராந்தி பெருவிழா பொங்கல் பண்டிகை (ஜன.,15) தொடங்கியது. இதையொட்டி (ஜன.,15) மாலை சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

மாட்டு பொங்கலான (ஜன.,16) காலை சவ்சவ், உருளை கிழங்கு, கத்தரிக்காய், முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், மிளகாய், நெல்லிக்காய் போன்ற பல்வேறு வகையான காய்கறிகளாலும், ஆரஞ்சு பழம், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பலவகையான பழங்களாலும், முறுக்கு மற்றும் பல்வேறு வகையான இனிப்புகளாலும், மலர்களாலும் நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மொத்தம் 2 டன் காய்கறிகள், மலர்கள், இனிப்புகள், பழங்களால் நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

மேலும், 108 பசுக்களுக்கு பூஜை நடைபெற்றது. நந்திபெருமான் சிலை முன்பு பசுமாடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு, மாடுகள் மீது சந்தனம், குங்குமம் பூசப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுதுணி போர்த்தப்பட்டு வழிபாடு நடைபெற்றது. மேலும் மாடுகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் நந்திபெருமானுக்கு படைக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: கருவலுார், ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar