Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் சேர்வீடு வேட்டைக்காரன் ... விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா விருதுநகர் பராசக்தி மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடாரண்யேஸ்வரர் கோவிலில் மாந்தீஸ்வரர் பூஜைக்காக பக்தர்கள் காத்திருப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடாரண்யேஸ்வரர் கோவிலில் மாந்தீஸ்வரர் பூஜைக்காக பக்தர்கள் காத்திருப்பு

பதிவு செய்த நாள்

06 ஏப்
2026
10:04

திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், மாந்தீஸ்வரர் பரிகார பூஜையை காண, திரண்ட பக்தர்கள் டிக்கெட் பெறுவதற்காக இரண்டு மணி நேரம் காத்திருந்தனர்.


திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு, வாரந்தோறும் சனிக்கிழமை நாளில் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை, காலை 6-:00 முதல் 12:00 மணி வரை, நான்கு குழுக்களாக பூஜை நடக்கிறது. இதில், பரிகார பூஜை ஒன்றுக்கு, 1,600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த பூஜையில் பங்கேற்றால் திருமண தடை நீங்கும், குழந்தை கிடைக்கும் என்பதால் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூஜை செய்து செல்கின்றனர். இந்நிலையில் வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்ததால், கடந்த வாரம் சனிக்கிழமை பூஜை ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் சனிக்கிழமை என்பதால் வழக்கம் போல நேற்று பூஜை துவங்கியது.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கான டிக்கெட் பெற, இரண்டு மணி நேரம், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar