Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை கூடலழகர் பெருமாள் சிலையில் ... நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தை முதல் ஞாயிறு பூஜை நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திம்மசமுத்திரத்திற்கு பார்வேட்டை
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திம்மசமுத்திரத்திற்கு பார்வேட்டை

பதிவு செய்த நாள்

18 ஜன
2016
12:01

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், திம்மசமுத்திரம் செல்லும் பார்வேட்டை உற்சவம், நேற்று கோலாகலமாக நடைபெற்றது.காஞ்சிபுரம் அடுத்த, திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் செல்லும் பார்வேட்டை உற்சவம் நடைபெறும். அதன்படி, நேற்று காலை 8:45 மணியளவில், கோவிலில் இருந்து ஏலவார்குழலி அம்பாளுடன், ஏகாம்பரநாதர், நாதஸ்வரம், கோலாட்டம், கட்டை கூத்து, பம்பை, கைசிலம்பாட்டம், கரகாட்டம் புலியாட்டம், தாரை, தப்பட்டை முழங்க, புறப்பட்டு சென்றார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடன் சென்றனர்.நேற்று மதியம் 2:00 மணியளவில், திம்மசமுத்திரம் கோவிலை சென்றடைந்தார். மாலை 3:00 மணியளவில், ஏகாம்பரநாதர் ஏலவார்குழலிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை முடிந்து, இரவு 9:00 மணியளவில், திம்மசமுத்திரத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 12:00 மணியளவில், கோவிலை வந்தடைந்தார்.

மாமல்லபுரம்: 108 வைணவ தலங்களில் ஒன்றான, மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், காணும் பொங்கல் தினமான நேற்று, பார்வேட்டை உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு, உற்சவர் ராஜ அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி, காலை, 4:00 மணிக்கு, கோவிலில் இருந்து புறப்பட்டார். பூஞ்சேரி; பெருமாளேரி; வடகடம்பாடி; நல்லான்பிள்ளை பெற்றாள்; காரணை; குச்சிக்காடு ஆகிய கிராமங்கள் வழியே சுவாமி ஊர்வலமாக சென்று, குழிப்பாந்தண்டலம், லட்சுமி நாராயண பெருமாள் கோவிலை அடைந்தார். இரவு, வீதியுலா சென்றவர், இன்று, அதிகாலை மாமல்லபுரம் கோவிலை அடைந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar