பெண்ணாடம்: முருகன் குடியில் நடந்த வழக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பொங்கல் பண்டிகையொட்டி, பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடந்த ௧௫ம் தேதி காலை 8:00 மணிக்கு கோலப் போட்டி, மாலை 3:00 மணிக்கு பொங்கல் விழா நடந்தது. மாலை 5:00 மணியளவில் நடந்த வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மாலை 6:00 மணியளவில் உறியடி, 7:00 மணிக்கு சிலம்பாட்டம், 7:30 மணிக்கு தப்பாட்டம் நிகழ்ச்சிகள் நடந்தன.