பதிவு செய்த நாள்
18
ஜன
2016
12:01
வேலூர்: தன்வந்திரி பீடத்தில், ஒரு லட்சத்து, 8 ஆயிரம் லட்டுகளுடன் ஹோமம் நடந்தது. வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில், உலக நலன் கருதி, ஒரு லட்சத்து, 8,000 லட்டுகளுடன் ஹோமம் நேற்று நடந்தது. முரளிதர ஸ்வாமிகள் ஹோமத்தை துவக்கி வைத்தார். வரும், 24ம் தேதி வரை ஹோமம் நடக்கிறது. இதற்காக, 100 பேர் கொண்ட குழுவினர் லட்டுகள் தயாரித்து வருகின்றனர். லட்டுகளைக் கொண்டு, சந்தான கோபால யாகம், லஷ்மி ஹயக்ரீவர், பாலரங்கநாதர், 27 நட்சத்திரங்கள், சத்தியநாராயணா, ராமர், லஷ்மி நரசிம்மர், மகா குபேர லஷ்மி, மகா சுதர்சனம், தன்வந்திரி, லஷ்மி நாராயணா, ஷோடாச லஷ்மி ஹோமம் என தினமும் வெவ்வேறு வகையான ஹோமங்கள் நடக்கிறது.