Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாதேஸ்வரர் கோவிலில் மண் உருவம் ... பத்ரகாளியம்மன் குண்டம் திருவிழா 25 ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணும் பொங்கல் விழா: 10 ஆயிரம் ஆடுகள் பலியிட்டு விருந்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2016
12:01

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணும் பொங்கல் விழாவையொட்டி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு உறவினர்களுக்கு பொதுமக்கள் விருந்து வைத்தனர். பொங்கல் பண்டிகை கடந்த, 15ம் தேதி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. விவசாயிகள் தாங்கள் வளர்த்து வந்த மாடுகளை குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, அவற்றுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனர். இதன் தொடர்ச்சியாக நேற்று காணும் பொங்கல் விழா நடந்தது. இதையொட்டி கிருஷ்ணகிரி அடுத்த கே.ஆர்.பி., அணை, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில், ஏராளமான பொதுமக்கள் காலை முதலே குவியத் துவங்கினர். கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, ஓசூர் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள், தங்கள் குடும்பத்தினருடன் அணை மற்றும் பூங்கா, படகு இல்லத்துக்கு வந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி, சுற்றுலாத்தலங்களில் தற்காலிக கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக கே.ஆர்.பி., அணை பகுதியில் மீன் கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டிருந்தது. மீன் வாங்க சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில், காணும் பொங்கலையொட்டி, கோலப்போட்டி, பானை உடைத்தல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி உட்பட பல்வேறு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. காணும் பொங்கலையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள், 25 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிகள், குல தெய்வத்துக்கு பலியிட்டு, தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விருந்தளித்தனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளிலும், நேற்று இறைச்சி விற்பனை அமோகமாக இருந்தது. போச்சம்பள்ளி அடுத்த நாகர் கோவிலில் நடந்த தேரோட்டத்தில், ஆயிரக்ணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar