பதிவு செய்த நாள்
18
ஜன
2016
12:01
ஈரோடு: ஈரோடு கோட்டையில், காவல் தெய்வமாக விளங்கும் பத்ர காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, வரும், 25ம் தேதி அதிகாலை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. அன்றிரவு, 10 மணிக்கு பூச்சாட்டுதல் நடக்கிறது. இதை தொடர்ந்து, 26ம் தேதி காலை காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் நடக்கிறது. முக்கிய நிகழ்வான தீ மிதித்தல், 29ம் தேதி காலை, 6 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி, 28ம் தேதி இரவு, கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழியில், எரிகரும்புகளிட்டு குண்டம் பற்ற வைக்கப்படுகிறது. தீ மிதித்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து பொங்கல் வைபவம் நடக்கிறது. மாலையில் மாவிளக்கு ஊர்வலம், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. அம்மனுக்கு குண்டம் இறங்கும் பக்தர்கள், மஞ்சள் நிற பருத்தி ஆடை அணிந்து விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்று, விழா குழுவினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.