சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2016 11:01
நெல்லிக்குப்பம்: மேல்பட்டாம்பாக்கம் சிவசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை நடந்தது. கடந்த 15ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. 17ம் தேதி மாலை யாகசாலை பிரவேசமும் முதல்கால யாகசாலை பூஜை, நேற்று 18ம் தேதி காலை இரண்டாம் காலயாகசாலை பூஜை நடந்தது. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜையும் மாலை ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. கும்பாபிஷேக தினமான நாளை (20ம் தேதி) காலை ஆறாம் கால யாகசாலை பூஜையும் மகா பூர்ணாகுதி தீபாராதனையும் தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 10:30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. மாலை திருக்கல்யாண உற்சவமும் இரவு சுவாமி வீதிஉலாவும் நடக்கிறது.