பதிவு செய்த நாள்
19
ஜன
2016
11:01
திருவள்ளூர்: திருவள்ளூர், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், நாளை (20ம் தேதி) மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது.திருவள்ளூர், பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகரில் உள்ளது விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். இங்கு, கர்நாடகாவில் உள்ள ஹாசன் நகரில் பிரம்மாண்டமான், 250 டன் மரகதப்பச்சை நிற கிரானைட் கல், 2001ம் ஆண்டு திருவள்ளூருக்கு கொண்டு வரப்பட்டது.பின், 32 அடி உயரம், 16 அடி அகலத்தில், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி வடிவமைக்கப்பட்டது. இப்பணி முடிவடைந்ததும், 2004ம் ஆண்டு, ஜூன் மாதம், 6ம் தேதி, பிரதிஷ்டை செய்யப்பட்டது.அன்றிலிருந்து ஆறு கால பூஜை விடாமல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கர்ப்பகிரஹம், விமானம், மகா மண்டபம், திருமடப்பள்ளி, ராஜகோபுரம் ஆகிய கட்டுமான பணிகள் செய்து முடிக்கப்பட்டது.ராஜ கோபுரத்துடனும், 108 அடி உயரத்தில் விமானமும், அதன் மேல் கம்பீரமான 15 அடி உயர கலசம் அமைக்கப்பட்டு உள்ளது.பணி நிறைவடைந்ததைஅடுத்து, மகா சம்ப்ரோக்ஷணம் விழா, நேற்று மாலை 5:00 மணிக்கு துவங்கின. மாலை 6:00 மணிக்கு பகவத் பிரார்த்தனையுடன் பாலிகா பிரதிஷ்டை., அக்னி பிரதிஷ்டை, பஞ்ச ஸூக்த ஹோமங்கள் நடைபெற்றன. இரவு 9:00 மணிக்கு பூர்ணாஹூதி, சாற்றுமுறை நடைபெற்றது. நாளை (20ம் தேதி) காலை 9:00 மணி முதல், 10:00 மணிக்குள் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது.பின், 11:00 மணியளவில், ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு பவுண்டேஷன் நிர்வாகிகள் மரியாதை, பட்டாச்சாரியார்கள் சம்பாவனை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு பஞ்சமுக ஸஹஸ்ர நாமார்ச்சானை, மங்கள ஆர்த்தி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேய ஸ்வாமி பவுண்டேஷன் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.