பதிவு செய்த நாள்
12
ஆக
2011
12:08
திருநெல்வேலி : கூந்தன்குளம் மாசானமுத்து சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று (12ம் தேதி) நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை விநாயகர் பூஜை, புண்ணியாவாஜனம், எஜமானார் சங்கல்பம், கணபதிஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதர்ஸன ஹோமம் நடந்தது. மாலையில் வாஸ்துசாந்தி, பிரவேசபலி, கால கர்ஷணம், முதற்கால யாகசாலை பூஜை, யந்திர பிரதிஷ்டை நடந்தது. கும்பாபிஷேக தினமான இன்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, சக்திஉருவேற்றுதல், பிரம்மச்சாரி பூஜை, கன்னிபூஜை, சுமங்கலிபூஜை, தம்பதிபூஜை, யாகவேள்வி நடக்கிறது. காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் கடக லக்னத்தில் மாசானமுத்து சுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.