அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் குமாரத்தில் இறந்த நொண்டிச்சாமி கோயில் காளைக்கு கிராமத்தினர் மரியாதை செய்தனர். அலங்காநல்லுார், பாலமேடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டில் இந்த காளையை விடுவது வழக்கம். பல்வேறு பரிசுகளை பெற்று கிராமத்திற்கு பெருமையும் தேடித் தந்தது. உடல் நலக்குறைவால் நேற்று காளை இறந்தது. கிராமத்தினர் கூடி மரியாதை செய்து, பின் அடக்கம் செய்தனர். காளை நினைவாக மண்டபம் கட்ட கிராமத்தினர் முடிவு செய்தனர்.