நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் 108 சங்காபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2016 11:01
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக 2ம் ஆண்டு விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், தீபாராதனை நடந்தது. 108 சங்குகளில் புனிதநீர் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது. யாகம் முடிவில் விநாயகருக்கு பூஜை செய்யப்பட்ட சங்குகளில் இருந்த நீரால் சங்காபிஷேகமும் மகா தீபாராதனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.