பதிவு செய்த நாள்
21
ஜன
2016
11:01
வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு, அபிேஷகம் நடந்தன. தைப்பூச விழாக்குழு தலைவர் மதனகோபால் தலைமையில், திருக்கொடி ஏற்றப்பட்டது. வரும், 23ம் தேதி மாலை, மாரியம்மன் கோவிலிருந்து திருமண சீர்வரிசை கொண்டு வரப்பட்டு, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 24ல், பால்குடம் எடுத்து வந்து சிறப்பு அபிேஷகம், காலை, 11:00 மணிக்கு, அன்னதானம் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை, திருவிழா குழு தலைவர் மதனகோபால், கவுரவத் தலைவர் வள்ளிக்கண்ணு, செயலாளர் மயில்கணேஷ், பொருளாளர் சிந்து செல்வம் உட்பட பலர் செய்து வருகின்றனர்.