பதிவு செய்த நாள்
21
ஜன
2016
12:01
குன்னுார் : அருவங்காடு காந்திநகர் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று துவங்குகிறது. இன்று மாலை, 3:30 மணிக்கு, சி.எப்., எஸ்டேட் லைன் மாரியம்மன் கோவிலில் இருந்து, கோபுர, தீர்த்த கலச ஊர்வலம் நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு, யாக வேள்வி, கணபதி பூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட உள்ளன. இரவு, 9:00 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் மற்றும் கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 22ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, கோபுர கலசம் மற்றும் கடவுள்களுக்கு, குன்னுார் தியாகராஜ குருக்கள் தலைமையில், கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. பின், அன்னதானம் வழங்கப்படுகிறது.