பதிவு செய்த நாள்
22
ஜன
2016
11:01
சென்னை: ஜெருசலேம் புனித பயணம் செல்ல விரும்பும் கிறிஸ்துவர்கள், தமிழக அரசின் நிதி உதவி பெற, இம்மாதம், 25க்குள் விண்ணப்பிக்கலாம் என, மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள், ஜெருசலேம் புனித பயணம் செல்ல, தமிழக அரசின் சார்பில், நபர் ஒருவருக்கு, 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கிறது. இந்த ஆண்டுக்கான புனித பயணம், மார்ச் முதல், ஜூன் வரை மேற்கொள்ள திட்ட மிடப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், இம்மாதம், 25க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என, அரசு அறிவித்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:* விண்ணப்பங்களை, கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும், பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் அலுவலகத்தில் கட்டணம் இன்றி பெறலாம் * www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், அண்ணா சாலை, சென்னை - 2 என்ற முகவரிக்கு, ஜன., 25 மாலை, 5:00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்* மேலும் விவரங்களுக்கு, 044 - 2851 4846 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.