சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, மண்டல பூஜை, நேற்று முதல் துவங்கியது. சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில், பதினேழு வருடங்களுக்கு பிறகு, வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து, 48 நாட்கள் நடக்கும் மண்டல பூஜை நேற்று தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் மாலை, 5 மணி முதல் ஏழு மணிக்குள் மண்டல பூஜை நடக்கும். மார்ச், 7ம் தேதி வரை மண்டல பூஜை நடக்கிறது. மண்டல பூஜை நிறைவு பெறும் அதே தினத்தில், நடப்பாண்டுக்கான குண்டம் விழா பூச்சாட்டுதலும் நடக்கவுள்ளதாக, கோவில் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.