காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 34ம் ஆண்டு, தைப்பூச திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் இன்று, அறுமுடி யாத்திரை ஞானஜோதி விழா நடக்கிறது. ஸ்ரீபெரும்புதுார் ஆரிய வைசிய பேரி செட்டியார் திருமண மண்டபத்தில், காலை 10:00 மணிக்கு பாத யாத்திரை துவங்குகிறது. காலை 10:30 மணிக்கு பூதபூரிஸ்வரர் தரிசனம்; மாலை 3:00 மணிக்கு வல்லம் ஸ்ரீசைனாம்பிகை உடனுறை சடையீஸ்வரர் தரிசனம்; மாலை 5:00 மணிக்கு ஞானகிரி அடைதல்; இரவு 11:30 மணிக்கு திருத்தேர் வீதிஉலா நடக்கிறது.