பரமக்குடி : தைப்பூச விழாவை யொட்டி பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் பழனி ஆண்டவருக்கு அபிஷேகம் நடந்தது. பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணிக்கு விசாலாட்சி அம்பிகை, சந்திரசேகரசுவாமி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா வந்தனர்.
* மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா வந்தனர். *தரைப்பாலம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 5 மணிக்கு முருகன் மயில் வாகனத்தில் வீதியுலா வந்தார்.
ராமநாதபுரம்: * குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில், வழிவிடு முருகன் கோயில், முகவை ஊரணி வடகரை பாலசுப்ரமணிய சுவாமி கோயில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பால்குடம், காவடிகள் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். * மண்டபம் காந்தி நகர் சண்முக சடாச்சர முருகன் கோயில், ரயில்வே ஸ்டேஷன் கதிர்காம சக்தி வடிவேல் முருகன் கோயில், குயவன்குடி சாது சுப்பையா கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
கீழக்கரை வடக்கு மேதலோடை பால சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. காலை 8 மணிக்கு பால்குடம், அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். * அழகன்குளம்நாடார் வலசை செல்வ கணபதி, பாலமுருகன் கோயிலில் மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. *மண்டபம் ஒன்றியம் சங்கந்தியான்வலசையில் மயில்வாகன பெருமான், பாம்பன் சுவாமிகள் கோயிலில் காவடிகளை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.