திண்டுக்கல், ஜன. 25 தைப்பூசத்தை முன்னிட்டு திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்தவாரி திருவிழா நடந்தது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், வெள்ளை விநாயகர் நன்மை தரும்108 விநாயகர், கந்தகோட்டம் தண்டாயுதபாணி முருகன், காளஹத்தீஸ்வரர், வண்டிகாளியம்மன், குபேர லிங்கேஸ்வர ர் ஆகிய உற்சவ மூர்த்திகள் தீர்த்தவாரி விழாவில் பங்கேற்றனர். இதற்காக காலை 7 மணிக்கு கோட்டை மாரியம்மன் கோயிலில் இருந்து குடகனாறு கணிர தீர்த்தவாரி திடலுக்கு புறப்படும் நிகழ்வு நடந்தது. தீர்த்தவாரி முடிந்தவு டன் அனைத்து உற்சவமூர்த்திகளுக்கும் 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்கணிர பூஜையும் நடந்தது. அங்கிருந்து சுவாமிகள் வீதி உலா புறப்பட்டு மாலையில் கோட்டை மாரியம்மன் கோயில் திடலுக்கு வந்து சேர்ந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகி சண்முக முத்தரசப்பன், ஆலோசனை கமிட்டி தலைவர் ரஅச‘திரண் செய்திருந்தனர்.