பதிவு செய்த நாள்
25
ஜன
2016
11:01
காரைக்கால்: காரைக்கால் ஆற்றங்கரை உஜ்ஜயினி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த 8ம் தேதி யாக சாலை அமைக்க பந்தக் கால் முகூர்த்தம் நடந்தது. கடந்த 22ம் தேதி விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம் நடந்தது. நேற்று யாகசாலை முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. நாஜிம் எம்.எல்.ஏ.,எஸ்.பி., பழனிவேல், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி ஆசைத்தம்பி, மாநில முன்னாள் முதல்வர் ராமசாமி, திருப்பணி குழுத் தலைவர் வெற்றிச் செல்வம், உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, மூர்த்தி, கணேசன், ரஞ்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.