பதிவு செய்த நாள்
25
ஜன
2016
03:01
திருவாரூர்: திருவாரூர் அருகே, எண்கண் சுப்ரமணியசுவாமி கோவிலில் நேற்று தைப்பூச விழா நடந்தது. திருவாரூர் மாவட்டம்,குடவாசல் தாலுகா, எண்கண் கிராமத்தில் அமைந்துள்ளது பிர்மபுரீஸ்வரர் கோவில்.இக்கோவிலில், தனிசன்னதியில், சுப்ரமணியசுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், ஆண்டுதோறும், தைமாதம் பூச நட்சத்திரம் அன்று,தைப்பூசவிழா நடந்து வருகிறது.நடப்பு ஆண்டு, தைப்பூசவிழா, கடந்த 15ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 16ம்தேதி, பல்லக்கு, சேஷவாகனம்; 17 ம்தேதி பூபல்லக்கு;18ம் தேதி மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளுதல்; 19ம் தேதி சண்முக பெருமான் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளுதல் நடைபெற்றது. 20ம் தேதி யானை வாகனம்;21ம்தேதி ரிஷபவாகனம்,கோபுர காட்சி,திருச்சப்பர காட்சி;22ம் தேதி குதிரை வாகனம்,சண்முகபெருமான் சட்ட தேருக்கு எழுந்தருளுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்றுமுன்தினம் காலை, வினாயகர் தேர் வடம்பிடித்தல்,மாலை 3:00 மணிக்கு சட்டத்தேர் வீதியுலா நடைபெற்றது. தைப்பூச நாளான நேற்று, சர்வப்பிராய சித்தாபிேஷகம், காவடி அபிேஷகம் நடைபெற்றது. விழாவில்,திரளான பக்தர்கள் பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 26ம் தேதி துவஜா அவரோகனம்; 27ம் தேதி, விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.