பெரம்பலுார்: அரியலுார் மாவட்டம் வி.கைகாட்டியில் ஜெயங்கொண்டம் சாலையில் உப்போடை பாலத்தில் கற்சிலை ஒன்று கிடப்பதாக கயர்லாபாத் போலீஸாருக்கு தகவல் வந்தது. கயர்லாபாத் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று கற்சிலையை மீட்டு விசாரித்தனர். விசாரணையில் ஆகாசா கருப்பையா சுவாமி கற்சிலை என்பதும், மர்ம நபர்களால் கடத்தி வரப்பட்டு இந்த பாலத்தில் விட்டு சென்றதும் தெரியவந்தது. இது குறி்த்து கயர்லாபாத் போலீஸார் விசாரிக்கின்றனர்.