பதிவு செய்த நாள்
25
ஜன
2016
04:01
மேட்டுப்பாளையம்: குருந்தமலையில் நடந்த தைப்பூசத் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். காரமடை அடுத்த மருதுõர் ஊராட்சி குருந்தமலையில், மிகவும் பிரசித்தி பெற்ற குழந்தை வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. இங்கு, கடந்த வாரம் தைப்பூசத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, திருவீதி உலா வந்தது. திருக்கல்யாண உற்சவத்தை அடுத்து, நேற்று மதியம் வள்ளி, தெய்வானையுடன் குழந்தை வேலாயுதசுவாமி தேருக்கு எழுந்தருளினார். மாலை, 5:20 மணிக்கு கிட்டாம்பாளையம், கே.புங்கம்பாளையம், தேக்கம்பட்டி, செல்லப்பனுõர், அரசப்பனுõர் ஆகிய ஐந்து கிராம ஊர்க்கவுடர் மற்றும் ஊர்க்கவுண்டர் ஆகியோர் முன்னிலையில், எம்.பி., செல்வராஜ், எம்.எல்.ஏ., சின்னராஜ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஞானசேகரன் ஆகியோர் தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தேர் மலையை சுற்றி வந்து, 6.15 மணிக்கு நிலையை அடைந்தது. இதில், காரமடையை சுற்றியுள்ள கிராமங்களில் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தேர்த்திருவிழாவில் பங்கேற்றனர். விழாவில் காரமடை பேரூராட்சி தலைவர் ஆறுமுகசாமி, வெள்ளியங்காடு ஊராட்சி தலைவர் ஜீவானந்தம், மகேந்திரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இன்று, இரவு பரிவேட்டையும், 26ல் காவடி ஆட்டமும், அன்னதானமும், இரவு தெப்பத்திருவிழா மற்றும் மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கைலாஷ், கோவில் பணியாளர் சுரேஷ் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.