ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் நடந்த, 10ம் ஆண்டு தைப்பூச திருவிழாவில் திரளான பக்தர்கள் முளப்பாரி மற்றும் பால் குடம் ஏந்திச் சென்று, சுவாமிக்கு அபிேஷகம் செய்தனர். ஊத்துக்கோட்டை ஸ்ரீஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ளது ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னதி. இங்கு, 10ம் ஆண்டு தைப்பூச திருவிழா நடந்தது. இதையொட்டி, செட்டித்தெருவில் உள்ள வினாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் முளப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கிருந்து, 50க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடம் ஏந்திக் கொண்டு கோவிலை வலம் வந்தனர். பாலை உற்சவர் முருகப்பெருமானுக்கு அபிேஷகம் செய்தனர். தொடர்ந்து தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிேஷகப் பொருட்களால் சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம், 01:30 மணிக்க மேல் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அங்குள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்துபக்தர்களுக்கு அருள்பாலித்தார்.