பதிவு செய்த நாள்
27
ஜன
2016
11:01
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள ராகவேந்திரர் கோவில், மூன்றாம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது. திருக்கோவிலூர், என்.ஜி.ஜி.ஓ., நகரில்உள்ளஸ்ரீ ராகவேந்திரர் கோவில், கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சுவாமிக்கு ஆராதனை நடந்தது. காலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், 6:00 மணிக்கு நிர்மால்ய அபிஷேகம், 8:30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம், 9:30 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம், 11:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு ஸ்வஸ்தி வாகனம் மங்களஆரத்தி, லட்சார்ச்சனை, தீபாராதனை நடந்தது. கலாரத்னா நாட்டியாலயா மாணவிகளின் பரத நாட்டியம் நடந்தது. கோவில் நிர்வாகி கோபிகிருஷ்ணன் தலைமையில் நடந்த இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.