Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமணத்தில் தடை ஏற்படுகிறதா? நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முதல் நட்சத்திரம் எது?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2016
01:01

முதல் நட்சத்திரம் எது என்றால் அசுவினி என்று டக்கென பதில் சொல்லி விடுவீர்கள். ஆனால் வேத காலத்தில் கார்த்திகை தான் முதல் நட்சத்திரமாக இருந்தது என்றால் ஆச்சரியம் தானே!

யாக குண்டத்தில் சில பொருட்களை இடுகிறார்கள். அவற்றை தேவர்களுக்குரிய அவிர்பாகமாக (உணவு) கொண்டு சென்று சேர்ப்பது அக்னி. இதனால் அக்னிக்கு நம் வாழ்வில் முக்கியத்துவம் உண்டு. திருமணங்கள் நடைபெறுவது கூட அக்னி சாட்சியாகத்தான். சீதாதேவி அக்னியில் குளித்தே தன் கற்புத்திறனை நிரூபித்தாள். திரவுபதி அக்னி குண்டத்தில் இருந்து தோன்றியதால் தான் ஐவருக்கு மனைவியாக முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் அக்னியில் குளித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொள்வாள். அக்னி குண்டத்தில் இருந்து வெளிப்பட்ட பாத்திரத்தில் இருந்த பாயாசத்தைக் குடித்த தசரதரின் மனைவியர் ராமன், லட்சுமணர், பரதன், சத்ருக்கனனைப் பெற்றெடுத்தனர். இப்படி ஆன்மிகத்தில் அக்னிக்கு பெரும்
முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. சிவபெருமானின் நெற்றியில் ஒரு கண் இருக்கிறது. இது அக்னியை சிந்துவதாகும். சூரபத்மனை அழிக்க இந்தக் கண்களில் இருந்து வெளிப்பட்ட அக்னி பொறிகளே கார்த்திகேயன் என்னும் கருணை தெய்வமாக வடிவெடுத்தது. தேவதைகளை வரிசைப்படி எண்ணும் போது அக்னியில் இருந்து தான் துவங்க வேண்டும். நரசிம்மரின் மூல மந்திரத்தைச் சொல்லும் போது ஸர்வதோ முகம் என்ற வார்த்தை வரும். இதற்கு எல்லாத்திசைகளிலும் முகம் உடையவர் எனப்பொருள். அக்னிக்கும் எல்லா திசைகளிலும் முகம் உண்டு. அக்னிக்கு இரட்டை முகத்துடன் சிலைகள் இருக்கும். அக்னியே கார்த்திகை நட்சத்திரத்திற்கு அதிஷ்டான தேவதையாக உள்ளார். ஆன்மிகத்தில் அக்னியே முதல் தேவதை என்பதால் வேத வழக்குப்படி கார்த்திகையே முதல் நட்சத்திரமாக இருந்தது. கார்த்திகையில் துவங்கி பரணியில் முடித்தனர். வேத காலத்திற்கு பிறகே அசுவினி என மாறி விட்டது. ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகன் கோவில்களில் அபிஷேகம் செய்து வழிபட்டால் முருகப்பெருமான் மனம் குளிர்ந்து வேண்டும் வரம் தருவார். அன்றைய தினம் கோவில்கள், வீடுகளில் யாகங்கள் நடத்துவதன் மூலம் தெய்வங்களின் கருணைப் பார்வையைப் பெறலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar